பாலியல் குற்றங்கள்.. அரபு நாட்டை பின்பற்றுங்க - திருமாவளவன் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் குற்றங்களை கட்டுப்படுவத்துவதற்கு அரபு நாடுகளில் பின்பற்றப்படும் கட்டுப்பாடுகளைப் போல, இந்தியாவில் தேசிய கொள்கை வரையறுக்கப்பட வேண்டும் என்று விசிக பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்டர்சிட்டி விரைவு ரயில் சென்றுள்ளது. வேலூர் அருகே சென்றபோது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thirumavalavan sexual harrasment

இதுகுறித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளதாவது: பாலியல் வன்முறைகள், பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அனைத்து மாநிலங்களிலும் பெருகி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. சமூக ஊடகங்களில் இன்றைக்கு பாலியல் தொடர்பான வீடியோக்கள் வெகுவாக பரப்பப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்துதற்கு இந்திய ஒன்றிய அரசு அல்லது மாநில அரசுகள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

அரபு நாடுகளில் இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடு அல்லது. ஆனால், இந்தியாவில் இதுபோன்ற வன்கொடுமைகள் அல்லது பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு கட்டுப்பாடற்ற சமூக ஊடகச் சுதந்திரம், யூடியூப் போன்ற வலைதளங்கள் இயங்குவது முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. வல்லுநர்களின் கருத்தாகவும் இருக்கிறது.

ஆகவே, தேசிய அளவில் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க தேசிய அளவிலான கொள்ளை வரையறுக்கப்பட வேண்டும். இதில் இந்திய ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்கும் பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாடு அரசு இதுபோன்ற குற்றங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாலும், இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை ஆகியவற்றில் விரைந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். இருப்பினும் இதுபோன்ற குற்றங்கள் பெருகாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கோவையில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்டர்சிட்டி விரைவு ரெயில், வேலூர் அருகே சென்ற போது, கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, தள்ளிவிடப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த கொடூரச் செயலை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, பெண்கள் பயணிக்கும் ரெயில் பெட்டிகளுக்கு துப்பாக்கி ஏந்திய, ரெயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் அதிகளவில் பணியில் ஈடுபடுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+