அறியாமையில் பேசுகிறாரா அண்ணாமலை.. ஒன்றுமே புரியவில்லையே.. திருமாவளவன் கடும் விமர்சனம்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறியாமையில் பேசுகிறாரா இல்லை வேண்டுமென்றே பிதற்றுகிறாரா என தெரியவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி- கிறிஸ்துவ சமூகநீதிப் பேரவை கொண்டாடும் கிறிஸ்துவப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. விசிக தலைவர் தொல் திருமாவளவன் எம்பி கலந்து கொண்டு பேராயர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
இதையடுத்து பேராயர்கள் ஒன்று கூடி வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். இந்த விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது: ஏசு பெருமான் பிறக்கும் போது யூத குடியில் பிறந்தவர். உலகை வழிநடத்த அவர் ஒரு பாதை வகுத்தவர்.

இஸ்லாமிய மதங்கள்
கிறிஸ்துவம், இஸ்லாமிய மதங்களுக்கு முன்பே இந்து மதம் தோன்றியது என சனாதனவாதிகள் சொல்கிறார்கள். ஆனால் அது இந்தியாவை தாண்டி வேறு ஒரு நாட்டில் பரவே இல்லை. ஆனால் கிறிஸ்துவம் 200 நாடுகளில் பரவி இருக்கிறது. சகோதரத்துவத்தை சமத்துவத்தை போதிக்கிற மதமாக விளங்கும் கிறிஸ்துவதம் 2000 ஆண்டுகளில் 200 நாடுகளில் பரவியுள்ளது.

கிறிஸ்துவம்
கிறிஸ்துவம் வந்த பிறகு தான் இருண்டு கிடந்த இந்தியாவில் வெளிச்சம் பிறந்தது. சமூக ஒழுங்கை ஒட்டுமொத்தமாக புரட்டி போடும் வகையில் பிரிட்டீஷ் ஆட்சி இருந்தது. அதனால் இன்றும் அவர்கள் பதறிக் கொண்டிருக்கிறார்கள். இரு மதங்களும் சகோதரத்துவத்தை கொண்டுள்ளதால் தான் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது.

புதிய வியாகியானம்
மதசார்பின்மைக்கும் புதிய வியாகியானம் சொல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் அறியாமையில் பேசுகிறாரா இல்லை வேண்டுமென்றே பிதற்றுகிறாரா என தெரியவில்லை. மதசார்பின்மை என்பதற்கு அவர் சொல்லும் விளக்கம் அவரவர் மதத்தை பின்பற்ற வேண்டும். குடிமக்கள் மதம் சார்ந்து இருக்கலாம்.

குடிமக்கள்
இந்திய அரசு மதசார்பற்ற அரசாக இருக்க வேண்டும். குடிமக்களை குடிமக்களாக மட்டும் பார்க்க வேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து பேசினார். ஏசு பெருமான் 32 ஆண்டுகள்தான் வாழ்ந்தார்.அவர் 3 ஆண்டுகள் போதித்த போதனைகள்தான் இதுவரை உலகை ஆள்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
-
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
பாஜக தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அண்ணாமலை.. அவருக்கு வாழ்த்துக்கள்.. திருமாவளவன்! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
பாஜக, ஆர்எஸ்எஸ் பெயர்கள் இல்லாத புதிய அரசியல் முகமூடி! அண்ணாமலை பிளான் பி! மாணிக்கம் தாகூர் சூசகம்












Click it and Unblock the Notifications