2 காரணங்களுக்காகவே தவெக ஆட்சியமைக்க ஆதரவு.. பிரஸ் மீட்டில் ஓப்பனாக சொன்ன திருமாவளவன்!
சென்னை: "இன்றைய சூழ்நிலையில் விசிகவால் தவெக ஆட்சியமைக்க முடியாமல் போனது என்ற பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக அக்கட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துள்ளோம்" என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், "8 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றோம். இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. மக்கள் நலக் கூட்டணி உருவான காலத்தில் இருந்து கொள்கை அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

இந்த அரசியல் நெருக்கடி உருவாகியிருக்கிற சூழலில் இடதுசாரிகளும், விசிகவும், தொலைநோக்குப் பார்வையோடு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இணைந்து முடிவெடுப்போம் என தீர்மானித்தோம். அதன் அடிப்படையில் அறிவித்திருந்தோம்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும், மாநிலக் குழுவில் எடுத்த முடிவையொட்டி, அந்த முடிவை விசிக உயர்நிலைக் குழுவில் கலந்தாய்வு செய்து முடிவை அறிவிப்பது என திட்டமிட்டிருந்தோம். அதன்படி நேற்று மாலை ஜூம் வாயிலாக உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதன் நிறைவாக கட்சியின் தலைவருக்கு இறுதி முடிவை எடுக்கிற அதிகாரத்தை வழங்குகிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் கலந்தாய்வு செய்து ஒரு முடிவை எடுத்து, தவெக ஆட்சி அமைக்க ஒரு ஆதரவு கடிதம் அளித்துள்ளோம்.
தமிழ்நாட்டில் இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்றும், அதைத் தடுக்கும் வகையிலும், 108 இடங்களில் வெற்றி பெற்றும் ஆட்சியமைக்க முடியாமல் சிக்கலில் தவெக திணறிக்கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த ஆதரவு நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்.
அதாவது இரண்டே காரணங்கள். தவெக ஆட்சி அமைப்பதற்கு விசிகவின் நிலைப்பாடு தடையாக இருந்துவிடக்கூடாது என்றும் குடியரசுத் தலைவர் ஆட்சி முறை நடைமுறைக்கு வந்துவிடக்கூடாது என்றும் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். ஆட்சி அமைப்பதற்கு மட்டும் வெளியில் இருந்து எங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களைக் கைப்பற்றினாலும் கூட, பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஆட்சியமைக்க இயலாமல் தவித்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தவெகவுக்கு விசிக இன்று ஆதரவு தெரிவித்துள்ளது. இதன்மூலம் தவெக ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை எட்டியது. தவெகவை தொடர்ந்து ஐயூஎம்எல் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதால் தவெக வசம் தற்போது 120 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
விஜய்யுடன் டெல்லி பயணித்த அந்த இளைஞர் யார்? போகுமிடமெல்லாம் கூடவே இருந்தாரே.. பின்னணி -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications