கடைசி நேரத்தில் திருமா எடுத்த முடிவு.. தவெக-விற்கு அடுத்த செக்.. விஜய் முதல்வராவது சந்தேகம்?
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சியை அமைக்க கூட்டணி உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தவெக தனிப்பெரும்பான்மையை எட்ட முடியாத சூழலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவே தற்போது விஜயின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக மாறியுள்ளது.
இந்த சூழலில், திமுக கூட்டணியில் நீண்டகாலமாக இருந்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருவது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

6 எம்எல்ஏக்கள் ஆதரவு..
தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் தலா 2 எம்எல்ஏக்களை கொண்டுள்ளதால், மொத்தம் 6 உறுப்பினர்களின் ஆதரவை கொடுக்கும் நிலையில் இந்த 3 கட்சிகளும் உள்ளன. இந்த ஆதரவு கிடைத்தால், தவெக தலைமையிலான கூட்டணி 119 உறுப்பினர்களின் பலத்துடன் எளிதாக பெரும்பான்மையை எட்டும்.
இதன் மூலம், விஜய் எந்த அரசியல் தடையும் இன்றி முதலமைச்சராக பதவியேற்கும் வாய்ப்பு உருவாகும்.
அமைச்சரவையில் இடம்
இந்த சூழ்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் அவரின் நிலைப்பாடு அரசியல் வட்டாரங்களில் புதிய அலையை உருவாக்கியுள்ளது. திருமா அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது, திமுக கூட்டணியுடன் விசிக நீண்டகாலமாக இணைந்து பயணித்து வருவதாகவும், அந்த நட்பு இன்னும் தொடர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவின் நீண்டகால நிலைப்பாடு என்றாலும், அமைச்சரவை பதவி கிடைப்பது மட்டும் ஒரு முடிவை எடுக்க போதுமான காரணமாக இருக்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த கருத்து, கூட்டணி அரசியலில் வெறும் பதவிகளை விட, எதிர்கால அரசியல் திசை மற்றும் கொள்கை சார்ந்த அணுகுமுறைகளே முக்கியம் என்பதை திருமா அவர்களின் கருத்துக்கள் காட்டுகிறது.
இடதுசாரிகளின் முடிவே முக்கிய சிக்னலா?
விசிக தனது இறுதி முடிவை அறிவிப்பதற்கு முன், இடதுசாரி கட்சிகள் எடுக்கும் நிலைப்பாட்டை கவனிக்க இருப்பதாக திருமாவளவன் தெரிவித்திருப்பது முக்கிய அரசியல் அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
இதனால், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளின் முடிவு, தமிழக அரசியலில் அடுத்த கட்ட மாற்றத்தை தீர்மானிக்கக்கூடியதாக மாறியுள்ளது. இதேவேளையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்காவிட்டால் விசிகாவும் ஆதரவு அளிக்காது.
இன்று முக்கிய ஆலோசனை கூட்டம்
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, தமிழக அரசியலின் அடுத்த சில ஆண்டுகளின் திசையை தீர்மானிக்கக்கூடிய முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது.
விஜயின் முந்தைய கூட்டணி அழைப்பு
திருமாவளவன் மேலும் கூறுகையில், விஜய் ஏற்கனவே கூட்டணி தொடர்பாக அணுகியிருந்தாலும், உடனடியாக அதை ஏற்க முடியாத சூழ்நிலை இருந்ததாக தெரிவித்துள்ளார்.
விசிக - தவெக இரு கட்சிகளின் எதிர்கால அரசியல் பயணம் எவ்வாறு அமையும் என்பதையும் கணக்கில் கொண்டு தான் முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், தற்போதைய ஆதரவு பேச்சுவார்த்தை வெறும் எண் கணக்காக இல்லாமல், நீண்டகால அரசியல் திட்டமிடலின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
திமுகவுக்கு அழுத்தம்
விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக அணிக்கு ஆதரவு அளிக்கும் சூழல் உருவானால், அது திமுக கூட்டணிக்கு பெரிய பின்னடைவாக அமையும். குறிப்பாக, நீண்டகால கூட்டணி கட்சிகள் புதிய அரசியல் அணியை நோக்கி நகரும் நிலைமை, தமிழக அரசியலில் புதிய தடுமாற்றத்தை உருவாக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
தவெக தற்போது சந்தித்து வரும் கூட்டணி அரசியல், விஜயின் அரசியல் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் எடுக்கும் முடிவு, வெறும் ஆட்சியமைப்பை மட்டும் தீர்மானிக்காது, தமிழகத்தின் அடுத்த கட்ட அரசியல் கூட்டணிகளையும் மாற்றக்கூடிய சக்தியாக அமையக்கூடும்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications