ஆட்சி அதிகாரத்தில் ஷேர்! சீனுக்குள் வந்த திருமாவளவன்.. என்ன சொன்னாருன்னு பாருங்க!
சென்னை: ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதுதான் தற்போது தமிழ்நாடு அரசியலில் ஹாட் டாப்பிக். காங்கிரஸ் இந்த கோரிக்கையை விடாமல் வலியுறுத்தியுள்ள நிலையில், திமுக இதில் துளியும் உடன்பாடு இல்லை என தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஆட்சியில் பங்கு என்பது விஜய் சொன்ன வார்த்தை. என்னுடன் கூட்டணிக்கு வந்தால், ஆட்சியில் பங்கு கொடுப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது வரை யாரும் அவருடன் கூட்டணிக்கு போகவில்லை என்பது தனிக்கதை. ஆனால், இந்த பங்கு விஷயத்தை மட்டும் காங்கிரஸ் கெட்டியாக பிடித்துக்கொண்டது.

இதை அக்கட்சியின் எம்பியான மாணிக்கம் தாகூரும், தரவு மேலாண்மை பிரிவு தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். முதலமைச்சர் இந்த விஷயத்திற்கு நேரடியாகவே நோ சொல்லிவிட்டார். தமிழ்நாட்டு மக்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், தமிழக்ததிற்கு இது செட் ஆகாது என்று கூறிவிட்டார். ஆனால், கதர் தலைகள் விட்டபாடில்லை.
இப்படி இருக்கையில் திருமாவளவன் இந்த விஷயம் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, "காங்கிரஸ் திமுக கூட்டணியில்தான் இருக்கும். இதில் சந்தேகம் வேண்டாம். நேற்று வேணுகோபால் பேசும்போது, இதை உறுதி செய்திருக்கிறார். காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் இருக்கிறது. அதில் குழப்பம் கிடையாது என்று அழுத்தமாக கூறியிருக்கிறார்.
இப்படியாக திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. நாங்கள் கூட்டணியை உருவாக்குவதிலும், அதை பாதுகாப்பதிலும் அக்கறையோடு இருக்கிறோம். கூட்டணி எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்கிற பொறுப்பு உணர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தைதான் கேட்கிறது. இப்படி கேட்பதால் கூட்டணி முறிந்துவிடாது. கூட்டணியில் அக்கட்சி இருப்பதால் உரிமையோடு கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதை கொடுக்க முடியுமா? முடியாதா? என்பதை திமுகதான் முடிவெடுக்க வேண்டும். உங்களுடைய வெற்றிக்காக பாடுபடுகிறோம். எனவே அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? அதில் ஒன்றும் தவறு கிடையாது.
அதேபோல எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதே கூட்டணியில் தொடர்கிறோம். எங்கள் கோரிக்கைகளை உரிமையோடு கேட்போம்" என கூறியிருக்கிறார்.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications