ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு.. மு.க.ஸ்டாலின்தான்.. திருமாவளவன் நெகிழ்ச்சி!
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் வாரிசு என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, 6 இடங்களுக்கு ஒப்புக் கொள்ளக் கூடாது, கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்று விசிகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அத்தனை எதிர்ப்புகளையும் மீறி, திமுக கூட்டணியை தொடர்ந்தது மட்டுமில்லாமல், 6 தொகுதிகளுக்கும் உடன்பட்டு கையெழுத்திட்டது விசிக. 'பாஜக தமிழகத்தில் காலூன்ற விடக் கூடாது என்ற பிரதான நோக்கத்தின் அடிப்படையில் திமுகவுடன் கூட்டணியை தொடர்வதாக' திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
பிறகு சலசலப்புகள் ஓய்ந்து, விசிக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், 'தி ஹிந்து தமிழ்' ஊடகத்துக்கு திருமாவளவன் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.
அதில், பாஜகவுக்கு எதிரான யுத்தத்தில் திமுகவையும் ஸ்டாலினையும் எந்த அளவுக்கு நம்புகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள திருமாவளவன், ஸ்டாலினை முழுமையாக நம்புவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக, ஸ்டாலினை 'கருணாநிதியின் பிள்ளை, ஜெயலலிதாவின் வாரிசு' என்று, தான் மதிப்பிடுவதாக தெரிவித்துள்ளார். அதாவது, உறுதியான சனாதன எதிர்ப்பு என்று கருத்தியல் சார்ந்து ஒரு முடிவை எடுக்கும்போது கருணாநிதியின் பிள்ளை என்பதை அவர் நிரூபிக்கிறார்; திமுக கூட்டணியை விட்டு விசிகவை அகற்ற எத்தனையோ சக்திகள் முயன்றன; குறிப்பாக, 'மநு' விவகாரத்தை இதற்குச் சரியான வாய்ப்பாக அவை பயன்படுத்தின; ஸ்டாலின் பக்கபலமாக நின்றார்.
பகைவர்களை அடையாளம் கண்ட பின் அவர்களுக்கு எதிராக எதற்கும் அஞ்சாமல் முன்னோக்கிச் செல்வதிலும், கூடவே அது நோக்கி இயக்கத்தையும் கட்டுப்பாடாக நிர்வகித்துச் செல்வதிலும் ஜெயலலிதாவை அவர் பிரதிபலிக்கிறார்' என்று திருமா தெரிவித்திருக்கிறார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications