மாஜி சபாநாயகர் தனபாலை விடுங்க.. மாமன்னன் எதை நினைவுபடுத்துகிறது தெரியுமா.. திருமாவளவன் விளக்கம்
சென்னை: இங்கே அமர்வதும் நிற்பதும் சாதியின் அடையாளங்களாக இருக்கின்றன என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மாமன்னன் திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் முன்னாள் சபாநாயகர் தனபாலை பற்றி எடுக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது. இந்த நிலையில் அவர் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியிருப்பதாவது: மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. நண்பர்கள் தகவல் சொன்னார்கள். 1972 ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருக்கிறேன். நான் அம்மாவின் தீவிர விசுவாதி. என்னுடைய உழைப்பை பார்த்து கட்சியில் அமைப்புச் செயலாளர் , அமைச்சர், சபாநாயகர் ஆகிய பொறுப்புகளை கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.
என்னுடைய சாயலில் இந்த படம் வந்திருந்தால் அது அம்மாவுக்குக் கிடைத்த வெற்றி என்றார். இந்த படம் ஆரம்பத்தில் தியேட்டர்கள் ஹவுஸ் புல் ஆகவில்லை என சொல்லப்பட்டாலும் இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனத்தை பார்த்த பலர் தியேட்டருக்கு படையெடுக்கிறார்கள்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில் சனாதனத்தின் அடிப்படை கூறாக இருக்கிற பாகுபாட்டை படத்தின் கருப்பொருளாக எடுத்து சாதி வெறிக்கும் சமூக நீதிக்குமான போரில் சமூக நீதி வெற்றி பெறும் என்பதை இயக்குநர் மாரி செல்வராஜ் உணர்த்தியுள்ளார்.
நட்சத்திர சின்னம், தேர்தல் பின்னடைவு எல்லாரும் வென்றார்கள் என்ற அறிவிப்புக்கு பிறகு மாமன்னன் வெற்றி அறிவிப்பு என்பது 2019 சிதம்பரத்தில் என்னுடைய தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்பட்ட பதற்றத்தை நினைவுப்படுகிறது. இமானுவேல் சேகரன் கூட அமர்ந்திருந்தால் தான் கொல்லப்பட்டார்.
இங்கே அமர்வதும் நிற்பதும் சாதியின் அடையாளங்களாக இருக்கின்றன என திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்த படம் ஒரு பிளாப் படம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் இந்த படம் தான் தனது கடைசி படம் என அமைச்சர் உதயநிதி கூறியிருக்கிறார்.
-
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!











Click it and Unblock the Notifications