உங்களுக்கு சந்தேகமே வேண்டாம்! பானை சின்னத்தில்தான் போட்டி! எந்த தொகுதி தெரியுமா.. திருமாவளவன் உறுதி!
சென்னை: மக்களவைத் தேர்தலில் தனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிட போகிறேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தொகுதி பங்கீடுகள், கூட்டணி என படுபிஸியாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த முறை இரு தனித் தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு கேட்டு வருவதாக தெரிகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு 2 இடங்களை திமுக ஒதுக்கியது. அதில் சிதம்பரத்தில் பானை சின்னத்தில் தொல் திருமாவளவன் போட்டியிட்டு வென்றார். அது போல் அக்கட்சியை சேர்ந்த ரவிக்குமார் விழுப்புரம் தனி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.
கடந்த முறை பானை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திருமாவளவன் தற்போது தொகுதி மாறுவார் என சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதை திருமாவளவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அரியலூரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என சொல்லக் கூடிய நிலை உள்ளது.
திமுக கூட்டணி, மக்களின் ஆதரவுடன் வரும் தேர்தலிலும் வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக கூட்டணியில் 10 கட்சிகளுக்கு மேல் இருக்கிறோம். அதில் இரு கட்சிகளுக்கு தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி முதல் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம்.
எங்களது விருப்பங்களை திமுக தலைமையிடம் சொல்லிவிட்டோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறலாம். நாங்கள் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில் ஒரு தொகுதி பொது தொகுதி. ஆனால் 8 கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் அவ்வளவு தொகுதிகளைப் பெற முடியாது என்ற உண்மையையும் நாங்கள் உணர்ந்து சூழலுக்கேற்ப முடிவு செய்வோம்.
சிதம்பரம் எனது சொந்த தொகுதி, இங்குதான் நான் போட்டியிடுவேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். இந்த முறை தென் மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் 3 தொகுதிகளிலும் ஆந்திராவில் 3 தொகுதிகளிலும் கேரளாவில் இரு தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications