சாதி மத மோதல்களை தடுக்க காவல்துறை இதைச் செய்ய வேண்டும்! திருமாவளவன் அளிக்கும் யோசனை!
சென்னை: தமிழகத்தில் சாதி மத மோதல்களை தடுத்திடும் வகையில் சாதி மத மோதல் பிரிவிலும் உளவுத்துறையை அமைக்க வேண்டும் என காவல்துறைக்கு விசிக தலைவர் திருமாவளவன் யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் பேசாமல் அவதூறு பேசி வருவதாக சாடினார்.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதனைக் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள்
சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழு அல்லது தனி உளவுத்துறை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சாதி மத மோதல்
மேலும், சாதி மத மோதல்களை தடுத்திடும் வகையில் சிறப்பு சைபர் கிரைம் உளவுத்துறை அமைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் பேசாமல் அவதூறு பேசி வருகிறார் என்றும் தன்னுடைய பெயரை விளம்பரப்படுத்தி அனைத்து தொலைக்காட்சிகளும் அவரைப் பற்றி பேச வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பேசி வருகிறார் எனவும் திருமாவளவன் விமர்சித்தார்.

நீட் விலக்கு மசோதா
மேலும் அவதூறு பேசி வரும் அண்ணாமலை மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் தற்போது ஆளுநரிடம் உள்ள நிலையில், அந்த தீர்மானத்தை விரைந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் கிடப்பில் போடாமல் ஒப்புதல் வழங்கி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

2-வது தலைவர்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் செய்யாமல் அவதூறு பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டும் இரண்டாவது அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதே குற்றச்சாட்டை அண்ணாமலை மீது இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications