இலவு காத்த கிளி.. பாஜக, பாமக உடன் எந்த சூழலிலும் கூட்டணி கிடையாது.. கட் அண்ட் ரைட்டாக சொன்ன திருமா!
சென்னை : "திமுகவையும், விசிகவையும் பிரிக்க இலவு காத்த கிளிபோல் காத்துக் கொண்டிருக்கிறது பாஜக. பாஜக மற்றும் பாமகவுடன் தற்காலிகமாக கூட ஒருபோதும் விசிக கூட்டணி வைக்காது" என விசிக தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜக தோல்வி குறித்துப் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "கர்நாடகாவிலிருந்து பாஜகவை விரட்டியதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கு ஆறுதல் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்திலிருந்துதான் மதவாத நச்சுக் கிருமிகளைத் தமிழ்நாட்டிலும் பிற அண்டை மாநிலங்களிலும் பரப்பி வந்தனர். இப்போது அந்த பேராபத்தின் தீவிரம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் பாஜக முற்றிலும் துடைத்தெறியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜகவை தூக்கிச் சுமந்து வரும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பாஜகவுடன் கொண்டுள்ள தங்களது கூட்டணி உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. பாஜகவுடன் சேர்வதால் அதிமுகவிற்கு எந்த ஒரு வலிமையும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வுதான் அடையும்" எனத் தெரிவித்திருந்தார்.
அதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், "திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எந்தப் பட்டியல் இன பிரச்சனைக்கும் தீர்வு காண முடியவில்லை. எதற்காக திருமாவளவன் அங்கு உள்ளார். திருமா சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள திருமாவளவன் எம்.பி, "திமுகவையும், விசிகவையும் பிரிக்க இலவு காத்த கிளிபோல் காத்துக் கொண்டிருக்கிறது பாஜக. பாஜக மற்றும் பாமகவுடன் தற்காலிகமாக கூட ஒருபோதும் விசிக கூட்டணி வைக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் விசிக, வரும் 2024 தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேரக்கூடும் என்ற யூகங்கள் அரசியல் அரங்கில் இருந்து வரும் நிலையில், பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் இணையமாட்டோம் எனக் கூறியுள்ளார் திருமாவளவன்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications