"பூணூல்" போடறாங்களே ஏன் தெரியுமா.. பிராமண பெண்களுக்கு விடுதலை இருக்கா.. நறுக்குனு கேட்ட திருமாவளவன்
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது சரமாரி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் திருமா
சென்னை: பூணூல் போடும் வழக்கம் வந்தது ஏன் தெரியுமா? என்பது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளதாகவும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.
திருமாவின் இந்த குற்றச்சாட்டு, பாஜகவை கொந்தளிக்க வைத்துள்ளது.. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஒன் இந்தியாவுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

வர்ண பேதம்
அப்போது பாஜக மற்றும் ஆர்எஸ்ஸை கடுமையாக தாக்கி பேசினார் திருமா.. அதன் சுருக்கம்தான் இது: "அந்த காலத்தை போல் இல்லை, இப்போது எல்லாம் மாறிவிட்டது, எல்லாரும் இங்கே சமம் என்று பேசுகிறார்களே? இன்னும் கிராமப்புறங்களில் வண்ணான் தொழிலை பிராமணன் செய்கிறானா? முடிவெட்டும் வேலையை சத்திரியன் செய்கிறானா? எந்த மார்வாடியாவது செய்கிறார்களா? சூத்திரர்கள் செய்யும் வேலையை, மற்ற வர்ணத்தை சேர்ந்தவர்கள் யார் செய்கிறார்கள்? எந்த பிராமணராவது நிலம் வாங்கி, ஏர் ஓட்டி விவசாயம் செய்கிறானா? களத்தில் உட்கார்ந்து மூட்டை தூக்கியிருக்கிறார்களா? மரம் வெட்டுகிறார்களா? தச்சு வேலை செய்கிறார்களா? வர்ணாசிரம தர்மம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

வர்ணங்கள் + பேதங்கள்
பூணூல் போடும் வழக்கம் வந்தது ஏன் தெரியுமா? விவசாயிகள், விவசாயிகள் அல்லாதவர்கள் என்பதை வேறுபடுத்துவதற்காகத்தான் அந்த வழக்கத்தையே கொண்டு வந்தார்கள்.. முதல் ஆள் பிராமணர் என்கிறார்கள்.. சத்திரியன் , வைசியன், சூத்திரன் இந்த வர்ணங்கள் கொண்டு வருகிறான்.. இந்த 4 வர்ணங்களுக்குள் ஏகப்பட்ட சாதி இருக்கிறது.. பிராமணர் என்பது வர்ணம், ஐயர் என்பது சாதி.. ஐயங்கார் என்பது சாதி.. பானர்ஜி, சட்டர்ஜி, முகர்ஜி என்று மேற்கு வங்கத்தில் சாதி உள்ளது.. படேல் என்று குஜராத்தில் சாதி உள்ளது.. நம்பூரிதிரி என்று கேரளாவில் உள்ளது.. பண்டிட் என்று காஷ்மீரில் சாதி உள்ளது..

அய்யங்கார்
இப்படி பார்ப்பணர்களுக்குள் 50, 70 சாதி இருக்கு.. அவர்களுக்குள் வேற்றுமை இருக்கு.. அவர்களுக்குள் கூட சமம் கிடையாது.. கொடுக்கல் வாங்கல் இல்லை.. கோத்திரம்கூட இல்லை.. ஒரு ஐயர், அய்யங்கார் வீட்டில் கல்யாணம் செய்ய முடியாது.. இது ஏற்றத்தாழ்வு கிடையாதா? பிராமண பெண்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருந்தாலும்கூட, ஆண்களுக்கு கீழ் கட்டுப்பட்டுதான் இருக்க வேண்டும்.. அதனால் இங்கு நாங்கள் மேற்கொள்வது வெறும் தலித்துக்களுக்கான போராட்டம் இல்லை, ஏற்றத்தாழ்வுகளுக்கான போராட்டம்.. இதில் பிராமணர்களின் விடுதலையும், பிராமண பெண்களின் விடுதலையும் அடங்கி உள்ளது.

ஆரம்ப புள்ளி
இதுவரைக்கும் இதெல்லாம் விவாதிக்கப்படாமலேயே பூசி மெழுகி கடந்துவிட்டோம்.. இப்போதுதான் இவையெல்லாம் விவாதமாகவே உருமாறி உள்ளது.. இனிதான் நிறைய விவாதிக்க வேண்டும்.. மனுதர்மத்தை விவாதிப்பதுதான் தொடக்கப்புள்ளி.. மனுதர்மம்தான் அவர்களின் வாழ்வியல் நெறி, இதுதான் அவர்களின் சமூக கட்டமைப்பு திட்டம்.. ஆனால், அதை அவர்கள் வெளியே சொல்ல மாட்டார்கள்.. இதை பாதுகாப்பதுதான், சங்பரிவார், ஆர்எஸ்எஸ்ஸின் திட்டம்.. நாங்கள் இந்துக்களை கவனமாக இருக்க சொல்கிறோம்..

4 ஹிந்துக்கள்
இந்து என்று சொல்வதால் மட்டுமே நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்.. இங்கே 4 வகையான இந்துக்கள் உள்ளார்கள்.. பிராமண இந்து, சத்திரிய இந்து, வைசிய இந்து, சூத்திர இந்து என உள்ளனர்.. இந்த 4 இந்துக்களும் சமம் கிடையாது.. பிராமண இந்துவும், சத்திரிய இந்துவும் சமம் கிடையாது.. பிராமண இந்துவும் சூத்திர இந்துவும் சமம் கிடையாது.. வைசியரும், சூத்திர இந்துவும் சமம் கிடையாது.. பிறப்பால் ஒருவனை உயர்வு-தாழ்வு என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்யக்கூடிய கோட்பாடுதான் சனாதன கோட்பாடு.. இதை நாங்கள் அம்பலப்படுத்துவதற்காக சொல்கிறோம்.. அதனால்தான் சனாதன சக்திகளை தனிமைப்படுத்துவோம், ஜனநாயக சக்திகளை ஐக்கியப்படுத்துவோம் என்று விசிக சொல்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications