திருமாவளவன் போட்ட போடு.. "தப்பி தவறி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்".. சென்னையை தெறிக்கவிட்ட பேச்சு
பாஜகவை சரமாரி விமர்சித்து பேசியுள்ளார் திருமாவளவன்
சென்னை: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் மூலம், நம் நாடு மிக ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது... ஜனநாயக சக்திகளை ஒன்று சேர விடாமல் தடுப்பதில் பாஜக முக்கிய குறியாக இருக்கிறார்கள். அதனால் தான் உத்தரபிரதேச தேர்தலில் கூட, எதிர்கட்சிகளால் வெற்றி பெற முடியவில்லை.. பாசிச சக்திகளிடமிருந்து இந்த தேசத்தை காப்பாற்றும் பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கிறது" என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அல் ஷிகப்பிங்சிகிச்சைநிறுவனம் சார்பில் 100 பெண்களுக்குச் சிறப்பு கப்பிங் சிகிச்சை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், கலந்து கொண்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது பாஜகவை கடுமையாக தாக்கியிருந்தார்..

பாஜக ஆட்சி
"உத்தரப்பிரதேசத்தில் தப்பித் தவறி பாஜக மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் அது உத்தரப்பிரதேசத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கே கேடு விளைவிக்கும்... ஊராட்சி மன்ற தலைவர், நகராட்சித் தலைவர், மாநகராட்சி தலைவர் போன்ற பதவிகளில் உள்ள பெண்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். அவ்வாறான பதிவுகளில் இருக்கும் இடங்களில் ஆண்களின் தலையீடும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

விசிக திருமாவளவன்
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் உலக மகளிர் தின கொண்டாட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பாராட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அஞ்சுகம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசியபோது, "மீண்டும் பாஜகவையே கடுமையாக சாடினார்.

விளையாட்டு
"உலகம் முழுவதும் பெண்கள் அதிகாரம் மறுக்கப்பட்டவர்களாக இருந்து வந்தனர். ஒரு சில பத்தாண்டுகளாகத்தான் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அதிகாரம் படைத்தவர்களாக வளர வேண்டும் என்று பேசப்பட்டு பேச்சுக்கள் எழுந்து, வளர்ந்து வருகின்றனர். அரசுத்துறை அதிகாரத்தில் இருந்தாலும், அரசியலில் அதிகாரத்தில் பெண்கள் வலிமை பெறவில்லை.

அதிகாரம்
சட்டத்தை இயற்றும் இடத்தில் பெண்கள் இருக்க வேண்டும். அப்பொழுது தான் பெண்களுக்கு எதிராக அடக்குமுறைகள் குறையும். பெண்களை அதிகாரப்படுத்த வேண்டும், ஒடுக்கப்பட்டவர்களின் தலைநிமிர்வுக்காக உருவான கட்சிதான் விசிக.. இந்த கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் மட்டும் அரசியல் பேசாமல் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அதே கருத்தியலை பேச வைத்தால் தான், நாம் ஆட்சி அதிகாரத்தை நோக்கி செல்ல முடியும்.

பொறுப்பு
நமது நோக்கம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்குவது கிடையாது.. விளிம்புநிலை மக்களை அதிகாரத்தில் உட்கார வைக்க வேண்டும்... கட்சி பொறுப்பும், தேர்தலில் வெற்றி பெற்று அடையும் பதவியும் எம்பிளாய்மெண்ட் சர்வீஸ் இல்லை.. மக்களுக்கு தொண்டு செய்ய கிடைத்திருக்கும் வாய்ப்பு என்பதை மனதில் நிறுத்தி கொள்ள வேண்டும்..

நாகரீகத்தின் உச்சம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவின் போட்டி வேட்பாளர்கள் உடனடியாக வழங்க ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டது நாகரிகத்தின் உச்சம்... நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.. காங்கிரஸ் சமாஜ்வாதி போன்ற எதிர்கட்சிகள் தனித்தனியாக நின்று வாக்குகளை சிதறடித்தது தான் இதற்கெல்லாம் முக்கியமான காரணம்.

பாசிச சக்தி
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் மூலம், நம் நாடு மிக ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது... ஜனநாயக சக்திகளை ஒன்று சேர விடாமல் தடுப்பதில் பாஜக முக்கிய குறியாக இருக்கிறார்கள். அதனால் தான் உத்தரபிரதேச தேர்தலில் கூட, எதிர்கட்சிகளால் வெற்றி பெற முடியவில்லை.. பாசிச சக்திகளிடமிருந்து இந்த தேசத்தை காப்பாற்றும் பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கிறது" என்றார்.
-
கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி -
என்னை அவர் அடித்ததில் மகிழ்ச்சி! திருமாவளவன் அறைந்தது குறித்து இளைஞர் விளக்கம் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications