கக்கூஸ் கழுவ வந்தார்கள் என்றெல்லாமா பேசுவது? சீமானுக்கு எதிராக வெடித்த திருமாவளவன்.. வார்த்தை போர்

அருந்ததியர்கள் குறித்து சீமான் பேசுவது இனவாதத்தின் உச்சம் என்று விமர்சித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அருந்ததியர்கள் தூய்மைப்பணி செய்ய வந்தார்கள்... கக்கூஸ் கழுவ வந்தார்கள் என்றெல்லாம் பேசுவது அந்த மக்களை காயப்படுத்துகிற செயல். இப்படியெல்லாம் பேசுவது இனவாதத்தின் உச்சம் என சீமானை கடுமையாக கண்டித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார்.

அண்மையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியின் பிரசாரக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , மேனகா முதலியார் ஜாதியை சேர்ந்தவர். அதனால் முதலியார் ஜாதி பற்றி பேசிய சீமான், முதலியார் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? மானத் தமிழ் மக்கள்தான் முதலியார்.

போர் நடந்தால் முதலில் வேல் ஏந்தி வரும் மக்கள்தான் முதலியார். அவர்களை தூய்மை பணி செய்ய விஜய நகர பேரரசை சேர்ந்த தெலுங்கன். அவர்கள் வரவில்லை என்றதும் வேறு வழியில்லாமல் அங்கிருந்த ஆதி குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள் எனவும் சீமான் பேசினார்.

அருந்ததியர்கள்

அருந்ததியர்கள்

அதாவது தமிழ்நாட்டில் வாழும் அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து தூய்மைப்பணிக்காக அழைத்து வரப்பட்டவர்கள் என்றும், தெலுங்கு மொழியில் பேசுவதால், அவர்கள் தமிழர்கள் இல்லை என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையானது.

தமிழ்நாட்டில் போராட்டம்

தமிழ்நாட்டில் போராட்டம்

சீமானுக்கு எதிராக தமிழ்நாட்டில் அருந்ததியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சீமான் மீது புகாரின் பேரில் வன்கொடுமை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சீமானிடம் செய்தியாளர்களிடம் அருந்தியர்கள் குறித்த பேச்சு குறித்து விளக்கம் கேட்ட போது, தன் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார். அருந்ததியர்கள் தமிழர்கள் இல்லை என்றே கூறினார். அருந்தியர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்றே கூறினார்.

என்ன அரசியல் இது

என்ன அரசியல் இது

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்த விவகாரம் குறித்து பாஜகவை விமர்சிக்கும் போது விவரித்தார். அப்போது அவர் கூறுகையில், " இங்கே சிலர் மொழி அரசியல் பேசுகிறார்கள். சிலர் தெலுங்கர்களை எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கன்னடர்களை எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். என்னய்யா அரசியல் இது? என்னைய அரசியல் பண்றீங்க. வாட் நான்சென்ஸ். டெல்லியில் இந்தி பேசுறவன் இருக்கிறான். அவன்தான் தமிழ்நாட்டின் மீது அழுத்தம் கொடுக்கிறான். அங்கே இருக்கும் பிராமணன்தான் தமிழ்நாட்டிற்கு ஆபத்து. தமிழ் மொழிக்கு ஆபத்து. ஆனால் அருகே இருக்கும் தெலுங்கனும், கன்னடனும்தான் நமக்கு ஆபத்தா? என்னைய அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க.. நான்சென்ஸ் என்று கடுமையாக திருமாவளவன் பேசினார்.

சீமான் மீது தாக்கு

சீமான் மீது தாக்கு

முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று திருமாவளவன் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சீமான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "உலக நாடுகள் முழுவதும் மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இது, மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. அந்த வகையில், அருந்ததியர்கள் மட்டும் வரவில்லை. அவர்களுடன் வேறு எத்தனையோ சமூகத்தினர் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்கள். அருந்ததியர்கள் தூய்மைப்பணி செய்ய வந்தார்கள் என்று பணியைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்கள் தூய்மைப்பணி செய்ய வந்தார்கள்... கக்கூஸ் கழுவ வந்தார்கள்.. என்று பேசுவது அந்த மக்களை காயப்படுத்துகிற செயல். இப்படியெல்லாம் பேசுவது இனவாதத்தின் உச்சம்" என சீமானை கடுமையாக கண்டித்தார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+