"அண்ணே திருமா".. ஒன்னும் பிரச்சனை இல்லை.. அதே விஷயத்தை கன்பார்ம்டு செய்த திருமாவளவன்.. குளிரும் திமுக
சென்னை: திடீர் திடீர் சலசலப்புகள் எழுந்துவந்தாலும், திமுகவுடனான கூட்டணியை தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறார் விசிக தலைவர் திருமாவளவன்.. அத்துடன் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் பெற்றுத்தர தமிழக அரசு தனி தீர்மானம் கொண்டுவந்தது, சமூக நீதி வரலாற்றில் இது ஒரு மைல் கல் என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தொல்.திருமாவளவன்.
2 நாட்களுக்கு முன்பு, திருமாவளவனிடம் ஒரு செய்தியாளர், "திமுககாரர் போல பேசுகிறீர்களே" என்று கேள்வி கேட்டார். அதைக்கேட்டு கோபமடைந்த திருமாவளவன், அப்போதே காட்டமாக பதிலடி தந்தார்.
"இந்த மாதியெல்லாம் பேசுகிற வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள்... அதை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இது நாகரிகம் இல்லாதப் பேச்சு. ஆகையால் நாகரிகம் தவறி பேசாதீர்கள் " என்றார்..
"இந்த மாதிரியெல்லாம் பேசுகிற வேலையை வைத்துக்கொள்ளாதீர்கள்... அதை வேறு யாரிடமாவது வைத்துக்கொள்ளுங்கள். இது நாகரிகம் இல்லாதப் பேச்சு. ஆகையால் நாகரிகம் தவறி பேசாதீர்கள் " என்றார்..

திருமாவளவன்: உடனே இன்னொரு செய்தியாளர், "என்ன கை நீட்டி பேசுறீங்க" என்று கேட்கவும், அதற்கு திருமாவளவன், 'உங்க முன்னாடி கையை கட்டி பேச வேண்டுமா? குனிஞ்சிக்கிட்டு நிற்க வேண்டுமா? என்று கேட்டிருந்தார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து, திருமாவளவனே ஒரு விளக்கம் தந்திருந்தார்.. நேற்று விடிகாலை 3 மணிக்கு ட்வீட்டை போட்டு, அதில் விளக்கமளித்திருந்தார்.
"வேங்கைவயல் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட, விசிக மற்றும் அதன் தலைமை மீதான நம்பகத்தன்மையைச் சிதைக்க வேண்டுமென்பதே அந்த செய்தியாளரின் கேள்வியில் இழையோடும் உள்நோக்கமென புலப்படுகிறது. பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று, கூட்டணி கணக்குகளை முன்னிறுத்தாமல், நேர்மை திறத்தோடு போராடி கொண்டிருக்கிற ஒரு இயக்கத்தை மற்றும் அதன் தலைமையை, ஒரு குதர்க்கமான கேள்வியின் மூலம் சிறுமைப்படுத்தும் நோக்கமே அதில் வெளிப்படுகிறது. அதோடு, அந்தக் கேள்வி பாதிக்கப்பட்ட வேங்கைவயல் மக்களின் மீதான கரிசனம் இல்லை என்பது மட்டும்தான் இதில் உணர வேண்டிய உண்மை நிலையாகும்" என பதிவிட்டார்.

எச்சரிக்கை தோழர்களே: இதற்கு பிறகு, திருமாவளவன் இன்னொரு விளக்கமும் தந்தார்.."என்னிடம் கேள்வி கேட்ட டிவி அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு கண்டனம் என்கிற பெயரில், நமது தோழர்கள் யாரும் நாகரிக வரம்பு மீறல் செய்வது கூடாது... அது எவ்வகையிலும். ஏற்புடையதல்ல. நமது பெயரில் நாகரிகக் கேடர்கள் திட்டமிட்டு ஊடுருவி ஏதேனும் வரம்பு மீறிப் பேசவும், பொதுவெளியில் நமக்கு எதிரான ஒரு பிம்பத்தை உருவாக்கிடவும் முனைவார்கள். அதற்கு நாம் இடம் தரக் கூடாது. எனவே, தோழர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இதனைக் கடந்து செல்லவும்" என்று திருமாவளவன் அறிவுறுத்தியிருந்தார்.
ராஜிவ்காந்தி: மிகுந்த பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவம் சோஷியல் மீடியாவிலும் எதிரொலித்தது.. ஏராளமான சிறுத்தைகள் ஒன்றுதிரண்டு திருமா பக்கம் நின்றார்கள்.. கூட்டணி கட்சிகளும் திருமாவளவனுக்கு ஆதரவை வெளிப்படுத்தின.. குறிப்பாக, திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி, ஒரு ட்வீட்டை போட்டு திருமாவளவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.. அதில், அண்ணன் திருமாவளவன் எம்பி அவர்கள் எப்போதும் ஊடகவியலாளர்களை ஒருமையில் பேசியது இல்லை, பேசுவதும் இயல்பிலேயே இல்லை! உள்நோக்கத்தோடு கேள்வி கேட்ட செய்தியாளரை உள்நோக்கம் கொண்டு கேள்வி கேட்காது ஆதாரத்தோடு கேளுங்கள் என சுயமரியாதையோடு அண்ணன் திருமா அவர்கள் பேசியது மிக மிக சரியே!, என்றார்.
இந்நிலையில், திண்டுக்கல்லில் பேசிய திருமாவளவன், சமூக நீதிக் காவலர் வி பி சிங்க்கு தமிழகத்தில் உருவ சிலை திறப்பது என்பது வரவேற்கத்தக்கது. கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளும், சலுகைகளும் பெற்றுத்தர தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அதனை விடுதலை சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறோம். சமூக நீதி வரலாற்றில் இது ஒரு மைல் கல்.
கன்பார்ம்டு: திமுக தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணியில் எந்த சிக்கலும் கிடையாது. திமுகவிற்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே இருப்பது நட்புணர்வு, கொள்கை சார்ந்த உறவு. தேர்தல் களத்தில் மட்டும் அல்லாது சமூக நீதிக்கான களத்தில் தொடர்ந்து இணைந்து பயணிக்க கூடிய வலுவை பெற்று இருக்கக் கூடிய கூட்டணி ஆகும். அதனால் தொடர்ந்து நாங்கள் திமுக கூட்டணியில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்" என்று கூறி கூட்டணியை மீண்டும் உறுதி செய்துள்ளார்..!!
-
கடலூரில் நடந்தது என்ன.. திருமாவளவனிடம் மனம் விட்டு பேசிய பிரேமலதா.. பரபரப்பு பின்னணி -
என்னை அவர் அடித்ததில் மகிழ்ச்சி! திருமாவளவன் அறைந்தது குறித்து இளைஞர் விளக்கம் -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications