விசிகவுக்கான 8 தொகுதிகள் முடிவாகிவிட்டது.. ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்.. திருமாவளவன் பேட்டி!
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் விசிகவுக்கான 8 தொகுதிகள் எது என்பது முடிவாகிவிட்டது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை என்று கூறியுள்ள திருமாவளவன், திமுக கூட்டணியில் பிரிவினை ஏற்படாதா என்று எதிர்பார்ப்பவர்கள் ஏமாறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இன்னும் 26 நாட்களே இருக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து, எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு என்ற முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விசிகவுக்கு ஏற்கனவே 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்ட சூழலில், அவர்களுக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற முடிவை எடுக்க அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயம் வந்தார்.

இதன்பின் முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் உடன்பாடு எட்டப்பட்டு, விசிகவுக்கான 8 தொகுதிகள் எவை என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எது என்பது முடிவு செய்யப்பட்டு கையெழுத்தாகிவிட்டது.
அதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முறையாக அறிவிப்பார். திருப்திகரமான பேச்சுவார்த்தையாக அமைந்தது. விரும்பிய தொகுதிகள் கிடைத்தது. இன்னும் ஓரிரு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அனைத்து கட்சிகளுடனும் பேசிய பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். திமுக கூட்டணியில் கடைசி நேரத்திலாவது பிரச்சனை வராதா என்று எதிர்பார்ப்பவர்கள் மீண்டும் ஏமாறப் போகிறார்கள்.
திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. 10க்கும் மேற்பட்ட கட்சியை அழைத்து பேசும் போது, தாமதம் ஏற்படத்தான் செய்யும். அப்படி எந்த இழுபறியும் இல்லை. இன்று இரவு அல்லது நாளை காலை அனைத்து தொகுதிகளும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பின் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்துள்ளார்.
விசிக கடந்த முறை வென்ற நாகை தொகுதியை இம்முறை திமுக கேட்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் காட்டுமன்னார் கோவில், வானூர், அரக்கோணம், செய்யூர், பொன்னேரி, அரூர், கள்ளக்குறிச்சி, பூந்தமல்லி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி வரலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications