தலித் முத்திரை குத்தி முடக்க முயன்றோரின் சதியை முறியடித்த பானை.. சிறுத்தைகளின் சாதனை.. திருமா
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவது விடுதலைச் சிறுத்தைகளின் வரலாற்றுச் சாதனை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சனாதன சக்திகள் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது. இந்த தேர்தல் சனாதன சக்திகளை வீழ்த்த வேண்டிய போர்தான் இந்த சட்டசபைத் தேர்தல்.

புதுவை
தமிழகம் மற்றும் புதுச்சேரியை குறிவைத்து செயல்படும் பாஜகவை தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதால் 6 தொகுதிகளை ஏற்பதாக திருமாவளவன் தெரிவித்தார். இதனால் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் செய்யூர், காட்டுமன்னார்கோவில், வானூர், திட்டக்குடி, உளுந்தூர்பேட்டை, மயிலம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.

4 தொகுதிகள்
இதில் போட்டியிட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் தொல் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 2 பொதுத் தொகுதி, 2 தனித்தொகுதி. 67% வெற்றி. வெறுப்பு அரசியலைத் தகர்த்தெறிந்து வெல்லும் விடுதலைச்சிறுத்தைகள்.

வரலாற்றுச் சாதனை
தலித் கட்சியென முத்திரை குத்தி சுருக்கி முடக்கி தனிமைப்படுத்த முயன்றோரின் சதியை முறியடித்தது பானை. இது சிறுத்தைகளின் #வரலாற்றுச்_சாதனை.
வழக்கம்போல ஊடகங்கள் இருட்டடிப்பு என திருமா தெரிவித்துள்ளார்.

அவதூறு
திருமாவின் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 14 நாட்கள் இடைவெளியில் அறிமுகமான சின்னம். விடுதலைச் சிறுத்தைகளின் #பானை_சின்னம். சாதி-மதவெறியர்கள் பரப்பிய #அவதூறுகளை_நொறுக்கித் தவிடு பொடியாக்கிவிட்டு வெற்றி இலக்கை எட்டுகிறது பானை என மற்றொரு ட்வீட்டில் திருமா தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications