திமுக கூட்டணிக்குள் சிக்கல்.. திருமாவளவனுக்கு மன அழுத்தம்.. புலம்புறாங்க.. தமிழிசை சரமாரி அட்டாக்!
சென்னை: திருமாவளவன் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அரசுடன் ஒட்டாத நீர் போல இருக்கின்றனர் என்றும் வேல்முருகனும் அதிருப்தியில் உள்ளார் என்றும் கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன. விசிக தலைவர் திருமாவளவன், திமுக உடன் தான் கூட்டணியை தொடர்வோம் என திட்டவட்டமாகத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், கூட்டணி தொடர்பாக எழும் விவாதங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஆதங்கத்தோடு பேசியுள்ளார் திருமாவளவன்.

ஃபேஸ்புக் லைவ் மூலமாக கட்சி நிர்வாகிகளிடம் தொல் திருமாவளவன் பேசும்போது, திமுக கூட்டணியை பலவீனப்படுத்த அவர்களிடம் உள்ள ஒரே துருப்புச்சீட்டு விசிக தான். திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். ஏதோ நாம் திமுகவை மட்டுமே நம்பி இருக்கிறோம் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள் எனப் பேசி இருந்தார்.
திருமாவளவன் மன அழுத்தத்தில் இருக்கிறார்
இந்நிலையில், சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும் தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், "திருமாவளவன் மன அழுத்தத்தோடு இருக்கக் கூடாது என சகோதரியாக நான் வேண்டிக் கொள்கிறேன். அவர் திமுகவால் தான் மன அழுத்தத்தில் இருக்கிறார் என நான் கருதுகிறேன். பாஜக - அதிமுக கூட்டணியை கேள்வி கேட்கும், திமுக கூட்டணி குழப்பத்தில் உள்ளது.
துணை முதலமைச்சர் என்று போஸ்டர் ஒட்டிய செல்வப்பெருந்தகை மறைமுகமாக எச்சரிக்கப்பட்டு, போஸ்டர்கள் அகற்றப்பட்டன. சாம்சங் தொழிலாளர்களுக்காக பேசிய கம்யூனிஸ்டுகள் ஒட்டாத நீரை போல இருந்து கொண்டிருக்கின்றனர். வேல்முருகன் எப்படி பேச வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். திருமாவளவன் அவர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்.
அந்த வகையில், பலமாக இருப்பது அதிமுக பாஜக கூட்டணி, மன அழுத்தமாக இருப்பது திமுக கூட்டணி தான் என திருமாவளவன் மறைமுகமாக சொல்லிவிட்டார் என்பது எனது கருத்து," எனத் தெரிவித்தார்.
மக்களுக்கு தேவை இல்லாதது
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை மக்கள் மாற்றத்தை விரும்பிக் கொண்டிருக்கின்றனர். மக்களின் அடிப்படை தேவைகள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பாலியல் தொந்தரவு மட்டுமல்லாமல், சாதிய தொந்தரவுகளும் அதிகமாக உள்ளது.
திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் அதனை குடித்து உயிரிழந்துள்ளனர். இப்படி மக்களுக்கான தேவை எவ்வளவோ இருக்கும்போது, தொகுதி வரையறையை பாருங்கள், கச்சத்தீவைப் பாருங்கள், மும்மொழி கொள்கையைப் பாருங்கள் என மக்களுக்கு தேவையில்லாததை எல்லாம் பேசி, தூசி தட்டிக் கொண்டிருக்கிறது திமுக. மேலும், மக்களை புறம் தள்ளி, புறக்கணித்து வருகிறார்கள். அதனை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக பாஜக கூட்டணி 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், மக்கள் கூட்டணியாக வெற்றி பெற்று மக்களுக்கானதை செய்யும்." எனத் தெரிவித்துள்ளார்.
புதுசா ஒரு தம்பி வந்திருக்காரு
மேலும் பேசிய தமிழிசை, "புதிதாக ஒரு தம்பி அரசியல் கட்சியை ஆரம்பித்து, நேரடியாக இல்லாமல் காணொளி மூலமாக கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மக்கள் காணொளி மூலம் தான் தலைவர்களை பார்க்க முடியும் என்றால், அது எப்படி சரியாக இருக்கும்?
ஆனால், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் களத்தில் இறங்கி தொண்டர்களை சந்தித்து வருகிறார். அனைவரும் இணைந்து கட்சிக்காக பங்காற்ற இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது பாஜக கூட்டணி தான். அதிமுக உடனான கூட்டணி வெற்றி பெரும். குளத்தில் தாமரை வட்ட இலையோடு மலரும், தமிழ்நாட்டில் தாமரை இரட்டை இலையுடன் மலரும். எல்லோரின் வாழ்வும் வளர வேண்டும் என்றால், நிச்சயம் தாமரை வளர வேண்டும். அதுதான் எங்களது குறிக்கோள்" என்றார்.
தபால்காரர் என அப்போது தெரியவில்லையா?
மேலும், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரை பார்த்து தபால்காரர் எனக் கூறுகிறார். இவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது அதிமுகவுக்கு எதிராக, ஆளுநரை சந்தித்துதான் புகார்களைக் கொடுத்தார்கள், அப்போது அவர் தபால்காரராக தெரியவில்லையா? அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் உயரிய பதிவில் இருக்கிறார். அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்.
எந்த வாரிசு அரசியலை எதிர்த்து வைகோ அரசியல் செய்தாரோ, தற்போது அந்த வாரிசு அரசியலாலே துன்பப்படுகிறார். வாரிசு அரசியல் என்பது கட்சிக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல என வைகோ போன்றவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக ரியாக்ட் செய்யாமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக ரியாக்ட் செய்கிறார். அவர் மக்களுக்காகவும் சிறிது ரியாக்ட் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications