சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டமார்".. திருமாவளவன் என்ன திமுகவை இப்படி சொல்லிட்டாரே.. "ஒரே வழி" என்றால்?.. பரபர அரசியல்

திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திருமாவளவன் பதிவிட்ட ஒரு ட்வீட், தமிழக அரசியல் களத்தில் பற்றி கொண்டு எரிகிறது.. அது தொடர்பான விவாதங்களும் வெடித்து கிளம்பி உள்ளன.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக முன்பு அளிக்கப்பட்டு வந்தது... அரசு ஊழியர் உயிரிழந்த பிறகும்கூட, அவரது மனைவிக்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டுதான் வந்தது...

இதனிடையே, ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்பட்ட சில நிதி சிக்கல் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமானது, கடந்த 2003-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

புட்டு புட்டு வைத்த திருமாவளவன்.. புட்டு புட்டு வைத்த திருமாவளவன்..

 ஓய்வூதிய திட்டம்

ஓய்வூதிய திட்டம்

புதிய ஓய்வூதிய திட்டமானது, மாதமாதம் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதற்கு அரசு ஊழியர்கள் எதிர்த்து வருகின்றனர்... புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறார்கள்.

திமுக

திமுக

இப்படிப்பட்ட சூழலில்தான், இந்த முறை திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்தது.. ஆனால், திமுக வெற்றி பெற்று ஓராண்டு கால ஆட்சி நிறைவுற்றும், பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று திமுக அரசு கைவிரித்து விட்டது. இது அரசு ஊழியர்களை அதிருப்தியில் ஆழ்த்தி வருகிறது.

 பச்சை துரோகம்

பச்சை துரோகம்

கடந்த 2 மாதங்களுக்கு முன்பேயே மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "மேற்குவங்கம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துள்ளன. கேரளா, டெல்லி, ஆந்திர மாநிலங்களின் அரசுகள், வல்லுநர் குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளன.. தமிழகத்திலும் பழைய பயனளிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக கொண்டிருந்தார்.

 ஜவாஹிருல்லா

ஜவாஹிருல்லா

இப்போது திமுக அரசு நம்பவைத்து பச்சை துரோகம் செய்துவிட்டதாக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன.. மற்றொரு பக்கம் கூட்டணியிலேயே உள்ள கட்சிகளும் இதேகோரிக்கையை வைக்க ஆரம்பித்துள்ளன.. அந்த வகையில், திருமாவளவனும் ட்வீட் போட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. "அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது தான் தமிழக அரசின் தற்போதைய இன்றியமையாதவொரு கடமையாகும்... சொல்லும் செயலும் ஒரே திசைவழியில் அமைந்திட வேண்டும். மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்கள் நலம்புரிய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

திருமாவளவன்

திருமாவளவன்

திருமாவளவனின் இந்த ட்வீட் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. லாக்கப் மரணம், மத மாற்ற விவகாரத்தினால் பள்ளி மாணவிகள் மரணம், பல்லக்கு தூக்க அனுமதி என திமுக அரசில் நடக்கும் எத்தனையோ விஷயங்களை கண்டும் காணாமல் போவதாகவும், அதற்கு திருமாவளவன் குரல் கொடுப்பதில்லை என்றும் ஒரு சலசலப்பு இருந்து வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில், திமுக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது, பரவலாக வரவேற்கப்படுகிறது. மிக சரியான வேண்டுகோள் என்றும் கூறப்படுகிறது.

 திருமா துணிச்சல்

திருமா துணிச்சல்

"தோழமை சுட்டுதல்" இதுதான் என்றும், #CPS-ஐ இரத்து செய்ய தமிழக அரசை தொடர்ந்துவலியுறுத்தி வரும் தங்களுக்கு அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று சிலர் இந்த ட்வீட்டை வரவேற்று கருத்து பதிவிடுகின்றனர்.. மேலும் சிலரோ, "சொல்லும் செயலும் ஒரே திசைவழியில் இல்லையா? முதல்வர் சரியான முடிவெடுக்கும் நலத்தில் இல்லையா? என்ன சொல்ல வர்றீங்க?" என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

திருமாவளவன்

திருமாவளவன்

அரசு ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளமே ரொம்பவும் அதிகம் இதில் வேறு எதுவும் வழங்ககூடாது என்றும் எதிர்கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.. எப்படி இருந்தாலும், சொல்லும் செயலும் ஒரே திசையில் அமைய வேண்டும் என்று திருமாவளவன் சொன்னது, கூட்டணியில் இருந்தாலும்கூட, துணிச்சல் மிகுந்த கருத்தாகவே பார்க்கப்படுகிறது.

English summary
Thirumavalavan upset over dmk government and should implement old pension scheme திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X