திருமாவை விடுங்க.. "கமலாலயம் வரட்டுமா நாளைக்கு.. டைம் கிடைக்குமா".. அண்ணாமலையிடம் வன்னியரசு கேள்வி
அண்ணாமலையுடன் விவாதிக்க வன்னியரசு நேரம் கேட்டுள்ளார்
ஒருவரை பாராட்டுவதும், புகழ்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், அம்பேத்கருடன் எப்படி மோடியை ஒப்பிடலாம்? என்ற பொதுப்படையான கேள்வியை பெரும்பாலானோர் எழுப்பி வருகிறார்கள். இதனால் இளையராஜாவை விமர்சித்தும் கருத்துக்கள் எழுப்பப்படுகின்றன. சென்னை: இந்து மத புதிர்கள் நூலை குறித்து விவாதிக்க, திருமாவளவனிடம் பாஜக அண்ணாமலை சவால்விட்டிருக்கும் நிலையில், அண்ணாமலையுடன் விவாதிக்க விசிகவின் வன்னியரசு நேரம் கேட்டுள்ளார்..!
கடந்த சில தினங்களாகவே, இளையராஜா கருத்து குறித்து சர்ச்சைகள் கிளம்பி கொண்டிருக்கின்றன.. விவாதங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.. கண்டனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன,.
ஒருவரை பாராட்டுவதும், புகழ்வதும் அவரவர் தனிப்பட்ட உரிமை என்றாலும், அம்பேத்கருடன் எப்படி மோடியை ஒப்பிடலாம்? என்ற பொதுப்படையான கேள்வியை பெரும்பாலானோர் எழுப்பி வருகிறார்கள். இதனால் இளையராஜாவை விமர்சித்தும் கருத்துக்கள் எழுப்பபப்படுகின்றன.

திருமாவளவன்
எனினும், விசிக தலைவர் திருமாவளவன் மட்டும், இளையராஜா பாவம் என்றார். "சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பது தான் ஆர்எஸ்எஸ்காரர்களின் நோக்கம்... ஆர்எஸ்எஸ்காரர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும்.. அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்றுதான் இசைஞானி சொல்லியிருக்கிறார். மற்றபடி, மோடியை எப்படி அவர் விமர்சித்து இருப்பார் என்று சொல்ல முடியாது. இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்ன் முக்கிய நோக்கம்... இளையராஜா பாவம்" என்று மிக நீண்ட விளக்கத்தை நேற்றைய தினம் திருமாவளவன் கூறியிருந்தார்.எனினும், விசிக தலைவர் திருமாவளவன் மட்டும், இளையராஜா பாவம் என்றார். "சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பது தான் ஆர்எஸ்எஸ்கார்களின் நோக்கம்... ஆர்எஸ்எஸ்காரர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும்.. அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்றுதான் இசைஞானி சொல்லியிருக்கிறார். மற்றபடி, மோடியை எப்படி அவர் விமர்சித்து இருப்பார் என்று சொல்ல முடியாது. இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்ன் முக்கிய நோக்கம்... இளையராஜா பாவம்" என்று மிக நீண்ட விளக்கத்தை நேற்றைய தினம் திருமாவளவன் கூறியிருந்தார்.

திருமாவளவன்
திருமா இப்படி பேசியிருந்தது வழக்கம்போல் பாஜகவுக்கு கடுமையான டென்ஷனை உண்டுபண்ணி விட்டது.. தமிழக பாஜக திருமாவளவனின் இந்த பேச்சுக்கு அப்போதே கண்டனத்தையும் தெரிவித்தது.. "திருமாவளவன் பாவம் அல்ல. அப்துல் நாசர் மதானியை சந்தித்த காரணத்தால்" என்று பதிவிட்டுள்ளார், பாஜகவின் நாராயணன். இந்நிலையில், அண்ணாமலை திருமாவளவனை சீண்ட ஆரம்பித்தார்.

மோடி
"அம்பேத்கர் செய்ததையும் பிரதமர் மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து விவாதிக்க நான் தயார், அதற்காக அண்ணன் திருமாவளவனை அழைக்கிறேன்... அவர் சொல்லும் இடத்தில் அவர் சொல்லும் நேரத்தில் விவாதிக்கலாம் என்று சவால் விடுத்திருந்தார்.. இதற்குதான் விசிகவின் பொதுச்செயலாளர் வன்னி அரசு கேள்வி எழுப்பியுள்ளார்... இதுதொடர்பாக வன்னி அரசு ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்..

கமலாலயம்
அதில், "புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விவாதிப்பதற்கு முன் #இந்துமதத்தின்புதிர்கள் (Riddles in Hinduism) நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம். நாளை கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா?" என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, வன்னி அரசு பதில் கேள்வி எழுப்பியுள்ளார்... இந்தப் பதிவில் அண்ணாமலையையும் அவர் டேக் செய்துள்ளார்... இதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications