வட இந்தியா போல வெறுப்பு பேச்சு..பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக..டிஜிபியிடம் புகார் சொன்ன திருமாவளவன்
வட மாநிலங்களில் இப்படித்தான் பாஜகவினர் வெறுப்பு பேச்சின் மூலம் வெறுப்பு பிரச்சாரங்களின் மூலம் வன்முறையை தூண்டி, ஆதாயம் தேடி வருகின்றனர்.
சென்னை: பாஜகவினர் திட்டமிட்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சி செய்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். டிஜிபியை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு நெருக்கடியை தர வேண்டும் சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று பாஜக குறி வைத்து வேலை செய்வதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு டிஜிபியை சந்தித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக சில தகவல்களை பகிர்ந்து கொண்டேன்.
தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் திட்டமிட்டு பொது வெளியில் பொது மேடையில் பேசி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பாஜகவினர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஆர்பாட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் பேசியது வன்முறையை தூண்டும் வகையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் ஒருவர் குண்டு வீசுவோம், துப்பாக்கியால் சுடுவோம் என்று பேசியிருப்பது வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. அதை தமிழ்நாடு பாஜக தலைவர் வெளிப்படையாக ஊக்கப்படுத்தும் வகையில் பேசுகிறார்.
இதை எல்லாம் பார்க்கும் போது பாஜகவினர் திட்டமிட்டு தமிழ்நாட்டில் வன்முறையை தூண்ட முயற்சி செய்கின்றனர். தமிழ்நாடு அரசுக்கு எதிரான தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசுக்கு நெருக்கடியை தர வேண்டும் சமூக பதற்றத்தை உருவாக்க வேண்டும். அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று பாஜக குறி வைத்து வேலை செய்கிறது.
வட மாநிலங்களில் இப்படித்தான் பாஜகவினர் வெறுப்பு பேச்சின் மூலம் வெறுப்பு பிரச்சாரங்களின் மூலம் வன்முறையை தூண்டி, ஆதாயம் தேடி வருகின்றனர். வடமாநிலங்களில் பின்பற்றக்கூடிய அதே உத்திகளை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்துவதற்கு ஆர்எஸ்எஸ் சங்பரிவார் கும்பல் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையில்தான் திருவள்ளுவருக்கு காவி உடை போர்த்துவது, பெரியாருக்கு காவி சாயம் பூசுவது போன்ற வேலைகளில் ஈடுபடுகின்றனர். அம்பேத்கருக்கு காவி உடை அணிவித்து திருநீறு பூசி அவமதிப்பது போன்ற காரியங்களை பாஜகவினர் செய்து வருகின்றனர்.
சமூக நீதி பயணம் மேற்கொண்ட கி. வீரமணி அவர்களின் வாகனத்தை மறித்து வன்முறையை ஏற்படுத்த முயற்சி செய்தனர். இப்படி மாநிலம் முழுவதும் பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக டிஜிபியின் பார்வைக்கு கொண்டு சென்றோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications