அமைப்பாய்த் திரள்வோம்... 7 மணி நேரம் ஆடியோ! அசையாமல் கேட்டு நெகிழ்ந்து போன திருமாவளவன்!
சென்னை: தாம் எழுதிய 560 பக்கங்களை கொண்ட அமைப்பாய்த் திரள்வோம் என்ற புத்தகத்தை ஆடியோ வடிவில் 7 மணி நேரம் கேட்ட திருமாவளவன், நெகிழ்ந்து போய் பழைய உற்சாகத்திற்கு திரும்பியிருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனால் மிகவும் ரசித்து ரசித்து எழுதப்பட்ட புத்தகம் அமைப்பாய்த் திரள்வோம் என்பதாகும். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் அமைப்பு என்றால் என்ன? அது சமூக அமைப்பா? அரசியல் அமைப்பா? பொருளாதார அமைப்பா? கலாச்சார அமைப்பா? அமைப்பின் நோக்கம் என்ன? இலக்கு என்ன? கொள்கை கோட்பாடுகள் என்ன? வடிவம் என்ன? விதிமுறைகள் என்ன? நிர்வாக நடைமுறைகள் என்ன? மக்களை ஏன் அமைப்பாக்க வேண்டும்? அமைப்பாக்க வேண்டிய மக்கள் யாவர்? என்பன உள்ளிட்ட விவரங்களை எல்லாம் 560 பக்கங்களுக்கு 58 கட்டுரைகளாக எழுதியிருந்தார் திருமாவளவன்.

இந்தப் புத்தகம் தான் இப்போது 7 மணி நேர ஆடியோவாக பென் டிரைவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஷேச தகவல் என்னவென்றால், அமைப்பாய்த் திரள்வோம் புத்தகத்தை ஆடியோ வடிவில் விசிக முக்கிய பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமாவளவனுக்கு முன் பின் பரிச்சயமில்லாத நவீன்குமார் என்பவர் இதனை முன்னெடுத்து திருமாவின் குட்புக்கில் இடம் பிடித்திருக்கிறார்.
அமைப்பாய்த் திரள்வோம் புத்தகம் ஆடியோ வடிவில் ரிக்கார்டு செய்யப்பட்ட போது ரிக்கார்டிங் தியேட்டருக்கே சென்று பல மணி நேரங்கள் செலவிட்ட திருமாவளவன், தமிழ் படிக்கத் தெரியாவதவர்களும் தன்னுடைய புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை இனி செவி வழியாக கேட்டறிய முடியும் எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அமைப்பாய்த் திரள்வோம் புத்தகம் என்பது கடந்த 2018ஆம் ஆண்டு விற்பனையில் சக்கை போடு போட்ட புத்தகங்களில் ஒன்றாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications