விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள்.. தவெகவினரை பங்கப்படுத்திய திருமாவளவன்
கடலூர்: தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம், வியூகங்கள் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசில் அடிப்பவர்களை தியேட்டர்களுக்கு அனுப்புங்கள். சட்டசபையில் விசில் அடிக்க முடியாது என்று தவெகவை திருமாவளவன் பங்கமாக கலாய்த்துள்ளார்.
கடலூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், "சமூக நீதிக்கு எதிரான சங்பரிவார் கும்பலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. காலூன்ற விடமாட்டோம். வேரூரன்ற விடமாட்டோம். இது உத்தரப்பிரதேசம் இல்லை. மத்தியப்பிரதேசம் இல்லை. இது வட இந்திய மாநிலங்கள் இல்லை. இது தமிழ்நாடு. பெரியார் மண். அண்ணா செழுமைப்படுத்திய மண். அண்ணா கட்டி காப்பாற்றிய மண். ஸ்டாலின் வழிநடத்தும் சமூக நீதி மண்.

சட்டசபையில் விசில் அடிக்க முடியாது
அதனால் தான் தளபதியுடன் நான் உடும்பு பிடியாக கைகோர்த்து நிற்கிறேன். எங்களுக்கு எவ்வளவு இடங்களில் என்பது பிரச்சனையில்லை. இந்த மண்ணையும்,, மக்களையும் காப்பாற்ற வேண்டும். சமூக நீதியை கட்டிட காப்பாற்ற வேண்டும். வலதுசாரி கும்பலுக்கு இங்கு இடமில்லை என்று ஏப்ரல் 23 ஆம் தேதி தீர்ப்பு எழுத வேண்டும். மே 4 ஆம் தேதி அந்த தீர்ப்பு வெளியாக வேண்டும்.
விசில் அடிப்பவர்களை..
200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். விசிலடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள். அவர்களை சட்டசபைக்கு அனுப்ப வேண்டாம். சட்டசபையில் விசில் அடிக்க முடியாது. தியேட்டரில் தான் விசில் அடிக்க முடியும். விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்புங்கள். இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்றும் திராடவிட மாடல் அரசை சட்டசபைக்கு அனுப்புங்கள்.
சிறுத்தையாக மாற்றியுள்ளோம்
இந்த 15 நாட்கள் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். காட்டுமன்னார்குடி வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற வேண்டும். நான் போட்டியிடுவதாக கூறிய தொகுதியில் அவரை நிறுத்தியுள்ளோம். காங்கிரஸ் பாரம்பர்யம் கொண்டவரை சிறுத்தை ஆக்கியுள்ளோம். இந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கவில்லை. காங்கிரஸ் பாரம்பர்யம் கொண்டவரை விடுதலை சிறுத்தையாக மாற்றியுள்ளோம்" என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications