ஓ.. எடப்பாடி அதை சொன்னதுமே, உடனே வந்த திமுக ராஜீவ் காந்தி.. பின்னாடியே பாஜக நாராயணன்.. நடுவுல திருமா
கிருஷ்ணகிரி விவகாரத்தில் திமுக ராஜீவ் காந்தி, எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: காதலின் மீதான வெறுப்பு அரசியல் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டதன் விளைவால் ஒரே சாதி எனினும் கிருஷ்ணகிரி ஜெகன் ஆணவப் படுகொலை. பெற்ற மகளையே விதவையாக்கிய குரூரம் என்று கிருஷ்ணகிரி கொலை சம்பவம் குறித்து திருமாவளவன் கேள்வி கேட்க, இதற்கு அரசியல் கட்சி தலைவர்களின் பதில் ட்வீட்கள் பதிவாகி வருகின்றன.
கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்.. 28 வயதாகிறது.. டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்துள்ளார். சரண்யா என்ற பெண்ணை, காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ஆனால் இந்த காதல் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. எனவே, வேலைக்கு சென்ற ஜெகனை, கிருஷ்ணகிரி அணை கூட்ரோடு அருகே வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றுள்ளனர்..

பதற செய்தது
கிருஷ்ணகிரி-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.. தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள், இதனை வீடியோவும் எடுத்துள்ளனர்... இது தொடர்பான விசாரணை ஒருபக்கம் நடந்து வந்தாலும், இந்த கொலை வீடியோவானது, சோஷியல் மீடியாவில் பரவி, நெஞ்சை பதற வைத்து கொண்டிருக்கிறது.. ஜெகனும், சரண்யாவும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.. ஆனாலும், பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார்கள்..

அரிவாள்
மகளை, திருமணம் செய்து கொண்டதால், ஜெகன் மீது சரண்யாவின் பெற்றோர் கடும் ஆத்திரத்திலும் இருந்துள்ளனர். பைக்கில் சென்று கொண்டிருந்த ஜெகனை பெண்ணின் அப்பா சங்கர், மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து நடுரோட்டில் பைக்கை வழிமறித்துள்ளனர்.. இதில் நிலைதடுமாறி ஜெகன் கீழே விழவும், அப்படியே அரிவாளால் சரமாரியாக வெட்டி வீழ்த்தி உள்ளனர்.. அதாவது ஜெகனின் கால்களை ஒருவர் பிடித்துக் கொள்ள, 2 பேர் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள்..

ஹைவேஸ்
ஹைவேஸில் நடந்த இந்த கொலையை, சிலர் தங்களின் செல்போன்களில் தூரமாக இருந்தவாறு அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்திருக்கிறார்கள். இந்த படுகொலை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.. அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், "காதலின் மீதான வெறுப்பு அரசியல் இங்கே தொடர்ந்து விதைக்கப்பட்டதன் விளைவால் ஒரே சாதி எனினும் கிருஷ்ணகிரி ஜெகன் ஆணவப் படுகொலை. பெற்ற மகளையே விதவையாக்கிய குரூரம். சாதி கவுரவம்,குடும்ப கவுரவம் போன்றவை சனாதனத்தின் கேடான உளவியல். இத்தகைய தீங்கான போக்கு துடைத்தெறியப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

விடியா ஆட்சி
இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.. "கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், நடுரோட்டில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சை பதற வைக்கிறது. அரசியல் கொலை, ஆதாயக்கொலை, ஆணவக்கொலை என குற்றவாளிகள் அச்சமின்றி வாடிக்கையாக செயல்படும் இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனைக்குரியது" என்று பதிவிட்டுள்ளார்.. இந்த பதிவை பார்த்ததுமே, திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி எடப்பாடிக்கு பதில் ட்வீட் பதிவிட்டார்.

போனது ஒரு உயிர்
அதில், "சம்பந்தப்பட்ட அனைவருமே, ஒரே சாதி என்ற போது, எப்படி ஆணவக் கொலையாகும்?" என்று கேட்டுள்ளார்.. திமுகவின் ராஜீவ்காந்தியின் இந்த ட்விட்டை பார்த்ததுமே, தமிழக பாஜக துணைத்தலைவர் திருப்பதி நாராயணன், "யார் அப்படி சொன்னது? பெயரை குறிப்பிட கூட அச்சம் ஏன்? கூட்டணியில் இருந்தாலும் போனது ஒரு உயிர். தைரியமாக பெயரை சொல்லவும்! என்று காட்டமாக ராஜீவ் காந்தியை கேட்டிருக்கிறார்..

அல்லோகல்லப்பட்டதே
இதற்கு நடுவில், ஒரே சாதி என்றபோது எப்படி ஆவண கொலையாகும் என்று ராஜீவ் காந்தி கேட்டுள்ளாரே? அப்படியானால் திருமாவளவனை பார்த்துதான், ராஜீவ்காந்தி இந்த கேள்வியை கேட்கிறாரா? திருமாவும் இதே கருத்தைதானே கூறியுள்ளார்? என்று சிலர் கிளப்பி விட்டுள்ளனர்.. ஆக, கிருஷ்ணகிரி கொலை குறித்து, திருமாவளவன் கண்டனம் தெரிவிக்க, பின்னாடியே வந்து எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சனம் செய்ய, எடப்பாடி பழனிசாமியை ராஜீவ்காந்தி கேள்வி எழுப்ப, ராஜீவ்காந்திக்கு திருப்பதி நாராயணன் பதிலடி தர.. ட்விட்டர் களமே, ஒரே அல்லோகல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது..!!!
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா?












Click it and Unblock the Notifications