அது மாதிரி எல்லாம் ஆசைப்படாதீங்க! அவ்வளவு சீக்கிரமாக நடக்காது! சமாளித்த திருநாவுக்கரசர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக -காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை உண்டாக்கலாம் என யாரும் ஆசைப்பட வேண்டாம் என்றும் அது ஒரு போதும் நடக்காது எனவும் திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

பேரறிவாளன் விடுதலை விவகாரம் வேறு, கூட்டணி வேறு என்றும் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று பொருத்திப்பார்க்கத் தேவையில்லை என விளக்கம் அளித்தார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிவாளனை கட்டிப்பிடித்து வரவேற்க வேண்டுமா அல்லது கையை பிடித்து வரவேற்க வேண்டுமா என்பதை எல்லாம் தாங்கள் உத்தரவு போட முடியாது எனக் கூறினார்.

Thirunavukarasar Mp Says, DMK-Congress alliance will continue

பேரறிவாளன் விடுதலையை புதிதாக ஒப்பிட்டு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் பேரறிவாளனை விடுதலை செய்யக் கூடாது என்பது காங்கிரஸ் நிலைப்பாடு என்ற போதிலும் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடாக
இருந்தது எனக் கூறினார்.

இரண்டு கட்சிகளும் வெவ்வேறு கருத்துக்களில் இருப்பது தெரிந்து தான் இத்தனை ஆண்டுகளாக கூட்டணி வைத்திருக்கிறோம் என்றும் ஏதோ இப்போது தான் இந்த விஷயம் புதிதாக நடந்திருப்பது போன்று பேசுவதற்கு ஒன்றுமில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், திமுக காங்கிரஸ் கூட்டணியை அத்துவிடுவதற்கான வேலைகள் நடப்பதாகவும் அது மாதிரி எல்லாம் யாரும் ஆசைப்பட வேண்டாம் என்றும் அவ்வளவு சீக்கிரமாக அந்த ஆசை நடக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ராஜீவ்காந்தியை பொறுத்தவரை அவர் உலகத் தலைவர் என்றும் அவரது கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் ஒன்றும் நிரபராதி கிடையாது எனவும் திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரை உயர்த்தியதற்கும் குறைத்ததற்கும்துளியும் சம்பந்தமே இல்லை என்றும் அவர் கிண்டல் செய்தார். திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் சுற்றி சுற்றி வினாக்கள் எழுப்பியும் அதனை சாதுர்யமாக சமாளித்தார் திருநாவுக்கரசர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+