சாலையோரம் எரிந்த காரில் 4 சடலங்கள்.. அதிர்ந்த போலீஸ்.. நெல்லை மாவட்டம் திசையன்விளை-யில் திக் திக்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை மருந்து புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக புகார் வைக்கப்படுகிறது. இதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி திசையன்விளை அருகே எரிந்த காரில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி திசையன்விளை அருகே எரிந்த காரில் இருந்து 4 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எரிந்த காரில் 4 சடலங்கள்
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே பெட்டைகுளம் பகுதியில் சாலை ஓரமாக எரிந்த நிலையில் ஒரு கார் இருந்துள்ளது. அந்த காரில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளதால் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தபோது, காரில் இருந்து கருகிய நிலையில் 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் அந்த கார் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. இது விபத்தா அல்லது கொலையா காரில் ஏதும் தொழில்நுட்ப கோளாறு இருந்ததா என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸார் விசாரணையில், சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள சொந்த வீட்டை விற்றுவிட்டு நாகர்கோவில் சென்ற நிலையில், முகமது ரபி, நஸ்ரின் பாத்திமா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications