நம்பர் தந்துட்டாங்களே! திருநெல்வேலிக்கு போன நல்ல செய்தி.. சென்னையிலிருந்து சல்லுனு போகலாம்! சூப்பர்
சென்னை: தமிழ்நாட்டில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த நிலையில்தான் திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வழியாக மைசூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.

வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மதுரை - பெங்களூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான பரிந்துரை தென்னக ரயில்வே மூலம் கொடுக்கப்பட்டு உள்ளது. 10 மணி நேரத்தில் மதுரை டூ பெங்களூர் செல்லும் விதமாக இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.
இன்னொரு பக்கம் திருநெல்வேலி மற்றும் சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் இதற்காக டிராக்கை சரி செய்ய வேண்டும். குறுகிய வளைவுகளை நீக்க வேண்டும். இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் எதிர்பார்த்ததை விட வேகமாக பணிகள் முடிந்துள்ளன. இதனால் இந்த மாதம் சென்னை - திருநெல்வேலிக்கு 7 மணி நேர ரயில் சேவை தொடங்கப்படும் என்கிறார்கள்.
சென்னை-நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலுக்கான எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லைக்கு வந்தே பாரத் சேவை தொடங்குவது உறுதியாகி உள்ளது. இந்த நம்பர் கொடுக்கப்பட்டதால் விரைவில் சேவை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒதுக்கீடு காரணமாக பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது போக சென்னை - விஜயவாடா இடையே புதிய சேவை அக்டோபர் பிரதமர் நரேந்திர மோடியால் காணொளி காட்சி மூலம் தொடங்கப்படும். இது குண்டூர், ரேணிகுண்டா, காட்பாடி வழியாக சென்னைக்கு வந்து அதே வழியில் திரும்பும். விஜயவாடா மற்றும் சென்னை இடையே நகரங்களுக்கு இடையேயான ரயிலின் பயண நேரம் கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் ஆகும். வந்தே பாரத் ரயிலால் 20 நிமிடங்கள் பயணம் குறையும். சென்னை டூ திருப்பதிக்கு ரயில் வரப்போவதாக செய்திகள் வந்த நிலையில்தான் இந்த விஜயவாடா ரயில் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
படுக்கை வசதி: இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வெறும் இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே உள்ளன. நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அங்கே ரயில்கள் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது படுக்கை வசதி கொண்ட ரயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் படுக்கை வசதிகளுடன் கூடிய 'வந்தே பாரத்' ரயில் அமலுக்கு வர போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
முக்கியமாக திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் படுக்கை வசதியுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. இதேபோல் கோவை - பெங்களூர் இடையிலும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications