திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும்.. நேரம் ஓவர்.. நீதிபதி சுவாமிநாதன் பெஞ்சில்.. அரசு பிடித்த பாயிண்ட்
சென்னை: கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கான அவகாசம், நேரம் முடிந்துவிட்டது. இனி அங்கே ஏற்ற முடியாது. என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், சமீபத்திய தமிழக அரசியல் வரலாற்றில் மத மற்றும் அரசியல் ரீதியிலான பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

திருப்பரங்குன்றம் வழக்கு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலையில் மீது உள்ள தீபத்தூணில் தீபத்தை ஏற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பின்னரே இக்கோயில் விவகாரம் தீவிரம் அடைந்து சர்ச்சைக்கு உள்ளானது.தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு செயல்படுத்தப்படாதபோது, இந்து அமைப்புகள் தலைமையில் பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. பாஜக தொண்டர்களும் இதில் கலந்துகொண்டனர். மோதல்கள் ஏற்பட்டதையடுத்து, போலீசார் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினரை கைது செய்தனர். அண்மைக் காலங்களில் மதக் குழுக்களுக்கும் அரசுக்கும் இடையே இத்தகைய நேரடி மோதலை தமிழ்நாடு இப்படி கண்டது அரிதான நிகழ்வு.
இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணை
இன்று இந்த வழக்கில் மனுதாரர் ராம ரவிக்குமாரின் வழக்கறிஞர் கூறுகையில், அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் வழக்கை இழுத்தடிக்க முயற்சிக்கின்றனர். டிவிஷன் பெஞ்ச் இடைக்கால நிவாரணம் வழங்கவில்லை, எனவே தனி நீதிபதியின் உத்தரவு இன்னும் அமலில் உள்ளது. அதனால் அதை நிறைவேற்ற வேண்டும் என்று வாதம் வைத்தார்.
போலீஸ் கமிஷனர் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், டிவிஷன் பெஞ்ச் வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்டதால் எஸ்.எல்.பி.க்கள் தொடரப்படவில்லை. அதிகாரிகள் பல வழக்குகளைத் தொடர விரும்பவில்லை . பக்தர் விரும்புவதால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏதாவது செய்யுமாறு நீதிமன்றம் கோயிலைக் கேட்க முடியாது. இறுதியில் நீதிமன்றம் சட்டத்தை தீர்மானிக்க வேண்டும். செயல்படுத்துவது நிர்வாகத்திடம் உள்ளது. சட்டம் & ஒழுங்கு பிரச்சினை இருப்பதாக நிர்வாகி உணர்ந்தால், அதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்
நீதிபதி சுவாமிநாதன்: இந்த வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல . அது கோவில் சொத்து சார்ந்ததும். இதில் யாரும் முடிவு எடுக்க முடியாது. கோவில் சொத்துக்கள் தீபம் ஏற்ற கூடாது என்று சொல்லும் உரிமை இல்லை.
அரசு தரப்பு: கோவில் தேவஸ்தானத்திற்கு அதற்கான உரிமை இல்லை. கோவிலில் எங்கே தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும் அதை நடைமுறைப்படுத்துவது அரசின் முடிவாக இருக்க வேண்டும். கோவில் நிர்வாகம்தான் அதில் முடிவெடுக்க வேண்டும். சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும் என்று வாதம் வைத்தது. நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம். அதனால் வழக்கை விசாரிக்க வேண்டும். கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கான அவகாசம், நேரம் முடிந்துவிட்டது. இனி அங்கே ஏற்ற முடியாது.
நீதிபதி சுவாமிநாதன்: உங்கள் வேண்டுகோளின் பேரில் நான் வழக்கை ஒத்திவைக்கிறேன். நான் அதை திங்கட்கிழமை வழக்கை விசாரிக்கிறேன். அதற்குள் உங்களுக்கு எந்த இடைக்கால நிவாரணமும் கிடைக்கவில்லை என்றால், நான் இந்த விஷயத்தைத் விசாரிப்பேன், என்று உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications
