உப்புக் கல்லும் வைரக் கல்லும் ஒன்றா.. இளையராஜாவை காட்டமாக விமர்சித்த திருப்பூர் எம்பி!
சென்னை: அம்பேத்கருடன் பிரதமரை ஒப்பிட்டு இளையராஜா பேசியது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் உப்புக் கல்லும் வைரக் கல்லும் ஒன்றா என திருப்பூர் எம்பி சுப்பராயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சட்ட மாமேதை அம்பேத்கர் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு அம்பேத்கர் அன்ட் மோதி என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.
அதில் அவர் எழுதியிருக்கையில் பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது.

இந்தியாவின் உள்கட்டமைப்பு
இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது, சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள்
இதுகுறித்து விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில் ஆர்எஸ்எஸ்காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன் என காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் திருப்பூர் எம்பி சுப்பராயன் பேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

உப்புக் கல்- வைரக்கல்
அவர் கூறுகையில் உப்புக்கல்லும் வைரமும் ஒன்றா? உதவாக்கரையும் உன்னத மாமனிதரும் ஒன்றா? கருப்பு பணம் அதிக அளவில் சேர்ந்து விட்டதால் ஏற்பட்ட அச்சம் காரணமாக இளையராஜாவிற்கு ஏற்பட்ட பிதற்றல் என பதிவிட்டுள்ளார். சினிமா பிரபலங்களும் இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Recommended Video

இளையராஜா விளக்கமளிப்பாரா?
இத்தனை எதிர்ப்புகள் வந்த நிலையில் இளையராஜா தான் அவ்வாறு பேசியது ஏன் என்பது குறித்து இதுவரை விளக்கம் அளிக்காமல் உள்ளார். இது அனைவரையும் வேதனைக்குள்ளாகி வருகிறது. எனவே இளையராஜா விரைவில் இதுகுறித்து ஏதேனும் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications