Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமிறிய திருவள்ளூர் கௌசல்யா.. கணவனும் தங்கை முறை காதலியும்.. இப்படியும் ஒரு ஜென்மங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவருடைய மனைவி கௌசல்யா.இவர்களுக்கு 5 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. கௌசல்யா, திருமணத்துக்கு பிறகும் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எட் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வந்தார். கௌசல்யா வீட்டில் இருந்த கோலம் உறவினர்களை ஆடிப்போக வைத்தது. இதையடுத்து போலீசார் விசாரித்த போது தான் கணவர் ராஜேஷின் நாடகம் அம்பலமானது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ளது பெரும்பேடு கிராமம்.இங்குள்ள பஜனை கோவில் தெருவில் 31 வயதாகும் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், ஊத்துக்கோட்டை பூரிவாக்கம் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 21 வயதாகும் கௌசல்யா ன்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கௌசல்யா, திருமணத்துக்கு பிறகும் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எட் பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்.

ponneri Thiruvallur

உடலில் காயம்

கடந்த பிப்ரவரி 7ம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்த கௌசல்யா, வீட்டில் தவறி விழுந்ததாகவும், இதில் தலையில் அடிப்பட்டு இறந்துவிட்டதாகவும் மாமனார் முருகனுக்கு ராஜேஷ் தகவல் கொடுத்திருக்கிறார். பதறி அடித்துக்கொண்டு வந்த அவர், மகள் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு ஆடிப்போனார்.

நாடகம் அம்பலம்

இதனால் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக பொன்னேரி போலீசில் கௌசல்யாவின் தாய் ரேவதி புகார் அளித்தார். மேலும் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்தது. இதற்கிடையில் போலீசார் ராஜேஷை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது ராஜேஷ், கள்ளக்காதலியுடன் சேர்ந்து தனது மனைவியை திட்டமிட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மனைவியை ராஜேஷ் கொலை செய்துவிட்டு, கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கள்ளக்காதல்

ராஜேஷும், செங்குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த உறவினர் மகளான 21 வயதாகும் தீபிகா என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். தீபிகா, சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள கல்லூரியில் எம்.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தங்கை முறை கொண்ட தீபிகாவை ராஜேஷ் காதலித்து வந்தாராம். இருவரது பெற்றோரும் அவர்களை கண்டித்தனர். ஆனாலும் அவர்கள், வீட்டுக்கு தெரியாமல் தங்கள் காதலை தொடர்ந்தாராம்.

திருமணத்தை மீறிய காதல்

இந்தநிலையில் ராஜேஷுக்கும், கௌசல்யாவுக்கும் 5 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்துள்ளது. இதனால் ராஜேஷ், தீபிகா இருவரது பெற்றோரும், அவர்கள் காதலை கைவிட்டு விட்டதாக நினைத்து கொண்டிருந்தார்களாம். ஆனால் திருமணத்துக்குப் பிறகும் தீபிகாவுடன் ராஜேஷ் திருமணத்தை மீறிய உறவை தொடர்ந்தாராம்.

தீர்த்துக்கட்ட முடிவு

இதற்கிடையில் தங்களது திருமணத்தை மீறிய உறவுகக்கு கௌசல்யா இடையூறாக இருப்பார் என கருதிய ராஜேஷ், அவரது கள்ளக்காதலி தீபிகா இருவரும் சேர்ந்து கௌசல்யாவை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.

திமிறிய கௌசல்யா

அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கௌசல்யாவின் முகத்தில் ராஜேஷ் தலையணையால் அழுத்தி உள்ளார்கள். இதில் மூச்சுத்திணறிய கௌசல்யா அவரிடம் இருந்து தப்பிக்க திமிறி உள்ளாராம். உடனே ராஜேஷ், கௌசல்யாவை சரமாரியாக தாக்கியதுடன், அவரது தலையை சுவற்றில் மோதினாராம். இதில் படுகாயம் அடைந்த கௌசல்யா, பரிதாபமாக இறந்துவிட்டார். அதன்பிறகு ராஜேஷ், கௌசல்யா கீழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்து இறந்துவிட்டதாக நாடகமாடினார்களாம். இதுபற்றி பொன்னேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், அவரது கள்ளக்காதலி தீபிகா இருவரையும் கைது செய்து அதிரடியாக சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+