மாதவிடாய் வலியில் துடித்து.. திருவள்ளூர் ரயில்வே ஸ்டேஷனில் கொடுமை! நொறுங்கிய உஷாவின் மாஸ்டர் பிளான்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்து சம்பவமானது, பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்து வந்தது.. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையை துவக்கினார்.. ஆனால், எந்தவிதமான க்ளூவும் கிடைக்கவில்லை.. இறுதியாக, 45 நாட்களுக்கு பிறகுதான், இது விபத்து அல்ல கொலை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.. என்ன நடந்தது திருவள்ளூர் மாவட்டத்தில்?
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கு 29 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ஜான்சி.. இந்த தம்பதிக்கு 4 வயதில் சாரிகா என்ற பெண் குழந்தை இருக்கிறாள்..

மதுபான கடைகளில் லோடு ஏற்றி இறக்கும் வேலையை செய்து வரும் அரவிந்த்துக்கு, குடிப்பழக்கமும் உள்ளது.. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்..
பால்ராஜ் தோழி உஷா
இந்நிலையில், அரவிந்தனுக்கு பால்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.. ஒருநாள் உஷா என்ற பெண்ணை, அரவிந்துக்கு அறிமுகம் செய்து வைத்தார் பால்ராஜ்.. இதனால் உஷாவும், அரவிந்தும் நெருங்கி பழகினார்கள்.. ஒருகட்டத்தில் கள்ளக்காதலாக இது மாறியது.
ஆனால், உஷா பணத்திற்காக பல ஆண்களிடம் பழகி ஏமாற்றுபவராம்.. இது தெரியாமல் உஷாவிடம் நெருக்கமான உறவு கொண்டிருந்தாராம் அரவிந்த்.. அதாவது மாதவிடாய் நேரத்திலும், தன்னுடைய விருப்பத்துக்கு இணங்க வேண்டும் என்று உஷாவை அரவிந்த் கட்டாயப்படுத்தி வந்ததாகவும் தெரிகிறது.
அரவிந்தை கண்டித்த நண்பன்
இது உஷாவுக்கு ஆத்திரத்தையும் கோபத்தையும் தந்துவந்துள்ளது.. உஷாவுக்கு 29 வயதாகிறது.. தன்னுடன் மட்டுமல்லாமல் மேலும் பல ஆண்களுடன் தவறாக பழகுவது அரவிந்த்துக்கு தெரியவந்து, உஷாவை கண்டித்துள்ளார்.. இதுவும் உஷாவுக்கு எரிச்சலை தந்து வந்துள்ளது.
இறுதியில், இதுகுறித்தெல்லாம் பால்ராஜிடம் சொல்லி முறையிட்டுள்ளார் உஷா.. உடனே பால்ராஜ் அரவிந்த்தை அழைத்து கண்டித்துள்ளார்.. ஆனால், அரவிந்த் எதையுமே பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியிருக்கிறார்.. அத்துடன் மீண்டும் உஷாவை தொடர்ந்து டார்ச்சர் செய்தும் வந்துள்ளார்.
கூலிப்படை இளைஞர்கள்
இதற்கு பிறகுதான், உஷா, பால்ராஜ் இருவரும் சேர்ந்து அரவிந்த்தை கொன்றுவிடுவது என்று முடிவெடுத்துள்ளனர்.. இதற்காக கூலிப்படையை சேர்ந்த 2 இளைஞர்களையும் நியமித்து, அரவிந்தனை கொலை செய்ய நாள் குறித்தனர்.
கடந்த ஜூன்19ம் தேதி, வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு, குடிபோதையில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார் அரவிந்த்.. அப்போது அவரை வழிமறித்த பால்ராஜ், அவரை ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
ரயில்வே ஸ்டேஷனில் சந்திப்பு
அங்கே கூலிப்படையை சேர்ந்த 2 இளைஞர்களும் அரிவாளுடன் தயாராக காத்திருந்த நிலையில், அரவிந்தை சரமாரியாக வெட்டி விட்டு, உடலை தண்டவாளத்தில் வீசி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். விபத்து போல சித்தரிக்க வேண்டும் என்பதற்காகவே, ரயில்வே ஸ்டேஷனுக்கு அரவிந்த்தை முன்கூட்டியே அழைத்து சென்றிருக்கிறார் பால்ராஜ்.
மறுநாள் காலையில், தண்டவாளத்தில் அரவிந்தின் சடலத்தை பார்த்த அந்த பகுதி மக்கள், உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.,. போலீசாரும் விரைந்துசென்று விசாரணை மேற்கொண்டனர்..
புகார் தந்த மனைவி
இதற்கு நடுவில், அரவிந்தின் மனைவி ஜான்சி, வேலைக்கு சென்ற தன்னுடைய கணவரை காணவில்லை என்று போலீஸில் புகாரளித்துள்ளார்... எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் தண்டவாளத்தில் கிடந்து உடலை பார்க்க ஜான்சி வரவழைக்கப்பட்டு, இறந்தது அரவிந்த்தான் என்பதும் உறுதி செய்யப்பட்டது..
இதையடுத்து, அரவிந்த் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்த போலீசார், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையையும் மேற்கொண்டனர்..
ஆனால், இந்த மரணம் குறித்து எந்த க்ளூவுமே கிடைக்காமல் இருந்தது.. 45 நாட்களுக்கு பிறகுதான் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அதில், அரவிந்தனை வெட்டி கொன்றது நிரூபணமானது.. பிறகு இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி, துரிதமான விசாரணை ஆரம்பமானது..
கொலை செய்யப்பட்ட அரவிந்தின் செல்போன் நம்பர்கள் ஆய்வு செய்யப்பட்டன.. அப்போதுதான் உஷா என்பவரின் பெயர் சிக்கியது..
உண்மையை உடைத்த உஷா
உடனே உஷாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் நடத்தியபோது, நண்பர் பால்ராஜூடன் சேர்ந்து திட்டம் தீட்டி, கூலிப்படையை வைத்து அரவிந்தனை கொன்றதாக ஒப்புக் கொண்டார்.. இப்போது உஷாவும், கூலிப்படையை சேர்ந்த விஷ்வா (19) ஜெய்சந்த் (18) என்ற 2 இளைஞர்களும் போலீசில் கைதாகி உள்ளனர்..
ஆனால் பால்ராஜ் தப்பிவிட்டதால் அவரை போலீசார் தேடிவந்த நிலையில், அவரையும் தற்போது கைது செய்துவிட்டார்கள்.. கைதான 4 பேருமே சிறையில் உள்ளனர்.
விபத்து போல சித்தரித்து நடந்த கொலையை, 45 நாட்களுக்கு பிறகு போலீசார் கண்டுபிடித்துள்ளது, திருவள்ளூரில் பரபரப்பை தந்து வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications