கதிரவன் உயிரிழந்தார்.. மனைவி அனிதாவால் ஸ்கெட்ச் போட்டு கள்ளக்காதலனால் தாக்கப்பட்டவர்!
Recommended Video

சென்னை: மனைவியின் கள்ளக்காதலனால் திருவான்மியூர் பீச்சில் தாக்கப்பட்டு காயமடைந்த கதிரவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கதிரவனுக்கும் (30) தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த அனிதாவுக்கும் (25) கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் சென்னையை அடுத்த பல்லாவரம் தர்கா சாலையில் ஒரு வீட்டில் இருவரும் குடிவந்தனர்.
கதிரவன் சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி துறையில் பணியாற்றி வந்தார். புதுமணத் தம்பதியான கதிரவனும் அனிதாவும் நேற்று காலை திருவான்மியூர் கடற்கரைக்கு வந்தனர். அப்போது கடற்கரை சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் கதிரவனை தாக்கிய மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை கேட்டனர்.

12 பவுன் பறிப்பு
எனினும் நகைகளை தர கதிரவன் எவ்வளவோ போராடினார். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் அவரை இரும்புக் கம்பியால் தாக்கி அவர்களிடம் இருந்த 12 பவுன் நகையை பறித்து சென்றனர்.

கதிரவன் பலி
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கதிரவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி கதிரவன் உயிரிழந்தார்.

கள்ளக்காதலுக்காக
தன்னுடன் படித்த ஜெகன் என்பருடன் ஏற்பட்ட காதல் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்துள்ளது. இதனால் கதிரவனுடன் வாழ அனிதாவுக்கு பிடிக்கவில்லை. கதிரவனை கொலை செய்ய திட்டமிட்டார்.

தப்பினார்
கோத்தகிரிக்கு கதிரவனுடன் ஹனிமூன் சென்றபோது அவரை கொல்ல சதி திட்டம் தீட்டினார் அனிதா. எனினும் எப்படியோ தப்பினார். ஆனால் இந்த முறை திருவான்மியூர் பீச்சில் வைத்து அவரை தீர்த்து கட்டுவது என முடிவு செய்து பக்காவாக பிளான் செய்ததில் கதிரவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications