திருவாரூர் அதிமுக வேட்பாளர் யார்? டாப்பில் இருக்கும் பெண் உறுப்பினர்.. நாளை அறிவிப்பு!
திருவாரூரில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை: திருவாரூரில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார்.
திருவாரூர் இடைதேர்தல்தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் தற்போது ஆட்டுவித்துக் கொண்டு இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பாளரை திமுகவும், அமமுகவும் ஏற்கனவே அறிவித்துவிட்டது.
முதல் ஆளாக நாம் தமிழர் வேட்பாளரை அறிவித்தது. இந்த நிலையில் அதிமுக யாரை வேட்பாளராக நிறுத்தும் என்ற எதிர்ப்பார்ப்பு எகியுள்ளது.

தொடர்ந்து தள்ளிப்போனது
இரண்டு நாட்களுக்கு முன்பே இன்று அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. திருவாரூர் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் இரண்டு நாள் முன் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாளை நடக்கும்
இந்த குழு கூட்டம் நாளை நடக்க உள்ளது. நாளை காலை 9 மணிக்கு இந்த குழு கூட்டம் நடக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்.

நாளை அறிவிப்பு
திருவாரூரில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர் பெயர் நாளை இந்த கூட்டம் முடிந்த பின் அறிவிக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். காலை 10 -11 மணிக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவின் ஏ.என்.ஆர் பன்னீர்செல்வம், மணிகண்டன், கலியபெருமாள், மலர்விழி கலியபெருமாள் ஆகியோர் வேட்பாளர் போட்டியில் இருக்கிறார்.

யார் வாய்ப்பு
இதில் மலர்விழி கலியபெருமாள் அதிகம் தேர்வாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவர் உள்ளூரில் மிகவும் பிரபலம். அதேபோல் பெண் வேட்பாளர் என்பதால் கூடுதல் பலம். பெண்களின் வாக்குகள் எப்போதும் அதிமுகவிற்கு அதிகம் விழும் என்பதால் இவர் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications