சூடுபிடிக்கும் களம்.. திருவாரூரில் குவியும் அரசியல் தலைவர்கள்.. ஸ்டாலினும் விஜயம்!
நாளை திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
Recommended Video

சென்னை: நாளை திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.
ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதற்கான பிரச்சாரம் தற்போது நடந்து வருகிறது.
திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கிவிட்டது. திமுக பல முக்கிய தலைவர்களை இந்த தேர்தல் பிரச்சாரத்தில் களமிறக்க போவதாக தகவல்கள் வருகிறது.

மிகவும் வலுவான வேட்பாளர்
திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட போகும் திமுக வேட்பாளராக திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரின் தேர்வு திருவாரூர் திமுக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. உள்ளூர் அரசியல்வாதி என்பதால் இந்த தேர்தலில் இவரின் வெற்றிவாய்ப்பு அதிகம் ஆகியுள்ளது.

திட்டம்
இந்த தொகுதியில் கட்டாயம் வெற்றிபெற்றாக வேண்டிய சூழ்நிலையில் திமுக இருக்கிறது. இதனால் இங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. திமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் எல்லோரும் இதற்காக தேர்தல் களத்தில் குதிக்க இருக்கிறார்கள். தினம் ஒரு பிரபல தலைவர் திமுக சார்பாக பிரச்சாரம் செய்ய உள்ளார்.

நாளையில் இருந்து பிரச்சாரம் செய்கிறார்
நாளை திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது. அவர் நேற்று இதற்காக சென்னையில் இருந்து திருவாரூர் சென்றுள்ளார். இன்று மாலை திருவாரூரில் அவர் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று தகவல்கள் வருகிறது. விரைவில் அங்கு பெரிய பிரச்சார கூட்டம் நடக்கும் என்று கூறுகிறார்கள்.

முக்கிய தலைவர் செய்ய வாய்ப்பு
திமுக சார்பாக திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமில்லாமல், மற்ற திமுகவின் தோழமை கட்சிகளும் பிரச்சாரம் செய்ய இருக்கிறது. மதிமுக, இடதுசாரிகள், விசிகவை சேர்ந்த தலைவர்கள் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதனால் திருவாரூர் களம் முக்கியத்துவம் பெறுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications