திருவேற்காட்டில் ஆசையாக புதிய வீடு வாங்கிய ஜெகதீஷ்.. வீட்டு வரி.. நகராட்சி ஊழியருக்கு நல்ல பாடம்
சென்னை: திருவள்ளூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் நடேசன் நகர் பகுதியில் புதியதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டை தனது பெயருக்கு மாற்றவும், வீட்டு வரி செலுத்துவதற்காகவும் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவரிடம் வரி வசூலிக்கும் பணி செய்து வந்த உமாநாத் என்பவர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசாயனம் தடவிய நோட்டுகளை வாங்கிய போது, நகராட்சி ஊழியர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியிருகிறார்.
வீடு வாங்குவோர்,நிலம் வாங்குவோர், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தோட்டம் என சொத்து வாங்குவோரை குறிவைத்து சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பது நடக்கிறது. லஞ்சம் கொடுக்காமல் எந்த பணிகளும் உடனே நடப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அரசு ஊழியர்கள் லஞ்சம்
பட்டா பெயர் மாற்றம் செய்ய, நிலத்தை அளந்து கொடுக்க, பத்திரப்பதிவு தொடர்பான பல்வேறு ஆவணங்களை பெற, சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய என பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் தான் பணிகளை சில அரசு அதிகாரிகள் மேற்கொள்வதாக புகார்கள் உள்ளது. அவர்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால், அரசு அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்புபோலீசார் கைது செய்வார்கள். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஒரு அதிகாரி கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
புதிதாக வீடு வாங்கியவர்
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் என்பவர் திருவேற்காடு நடேசன் நகரில் வீடு வாங்க விரும்பியுள்ளார்.ஆசை ஆசையாக பணம் சேர்த்து புதியதாக வீட்டினை வாங்கியிருக்கிறார். வீட்டை வாங்கிய நிலையில், அந்த வீட்டை அவரது பெயருக்கு மாற்றவும், வீட்டு வரி செலுத்துவதற்காகவும் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். அதற்கு நகராட்சியில் வரி வசூலிக்கும் பணி செய்து வந்த உமாநாத் என்பவர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஷ், லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. மாறாக திருவேற்காடு நகராட்சி அதிகாரியை மாட்டிவிடுவதற்காக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
25000 லஞ்சம்
இதையடுத்து திருவேற்காடு நகராட்சி ஊழியரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. கணேசன், இன்ஸ்பெக்டர் தமிழரசி ஆகியோர், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை ஜெகதீஷிடம் கொடுத்தனர். அந்த லஞ்சப் பணத்தை நகராட்சி ஊழியர் உமாநாத்திடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
திருவேற்காடு நகராட்சி அதிகாரி கைது
அதன்படி ஜெகதீஷ், திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் இருந்த உமாநாத்திடம் அந்த பணத்தை லஞ்சமாக கொடுத்திருக்கிறார். அதனை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து வந்து, உமாநாத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications