டியூஷனுக்கு வந்த இளம்பெண்.. சொல்ல சொல்ல அடங்காத கணவன்.. கடைசியில் தட்டி தூக்கிய போலீஸ்
டியூஷனுக்கு வந்த பெண்ணுடன் தகாத உறவு கொண்ட நபரை போலீஸ் கைது செய்துள்ளது
சென்னை: டியூஷன் படிக்க வந்த இளம்பெண்ணுடன், தகாத உறவு வைத்திருந்த கணவனை போலீசில் வசமாக மாட்டிவிட்டு, கைது செய்யவும் வைத்துள்ளார் அவரது மனைவி.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. போலீசாரும், கோர்ட்டும், இது தொடர்பான வழக்குகளில் எவ்வளவோ அறிவுரைகளை சொல்லி, கடிவாளங்களை போட்டாலும், தண்டனை வழங்கினாலும், குற்றங்கள் குறைவதில்லை.
நம் தமிழகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து வரும் மாணவிகளை நினைத்தால், அதற்கு மேல் கலக்கம் சூழ்ந்துவிடுகிறது..
கல்வி நிறுவனங்கள் என்றில்லாமல், டியூஷன் போன்ற தனிப்பட்ட முறையில் படிப்பு சொல்லி தரும் இடங்களிலும் இதே பாலியல் அத்துமீறல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன..

டியூஷன்
இப்படித்தான், 4 நாட்களுக்கு முன்பு கூட ஒடிசாவில் ஒரு சம்பவம் நடந்தது.. தன்னுடைய பள்ளி ஆசிரியையிடம், 9ம் மாணவி ஒருவர் டியூஷன் கற்று வருகிறார்.. அப்போது, டீச்சரின் கணவர், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார்.. தகாத இடங்களில் கை வைத்து சீண்டலில் ஈடுபட்டு வந்த நிலையில், ஒருகட்டத்தில் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யவும் முனைந்துள்ளார்..

உல்லாசம்
மாணவி அதற்கு மறுக்கவும், மண்ணெண்ணெய் ஊற்றியே அந்த பிஞ்சுவை எரித்து கொன்றேவிட்டார்.. இந்த அதிர்ச்சியே இன்னும் அடங்காத நிலையில், நம் சென்னையிலும் ஒரு டியூஷன் சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், இதற்கு சம்பந்தப்பட்ட மாணவியே குற்றம் செய்துள்ளதுதான் அதிர்ச்சியாக உள்ளது. சென்னையில் உள்ள திருவெற்றியூர் பெரியார் நகரை சேர்ந்தவர் சேகர்... இவர் அந்த பகுதியில் 30 வருடமாகவே டியூஷன் நடத்தி வருகிறார்...

சேகர்
இந்நிலையில், கடந்த 2015ம் வருடம் பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த ஒரு மாணவி, மறுபடியும் தேர்வு எழுதி, அடுத்தடுத்து படிக்க ஆசைப்பட்டார்.. அதற்காக சேகரிடம் டியூசனுக்கு வந்து சேர்ந்துள்ளார்.. 2015-ல் 10வது எழுதியிருக்கிறார் என்றால், இப்போது கிட்டத்தட்ட 21, 22 வயதிருக்கும்.. ஆனால், டியூஷன் படிக்க வந்த இடத்தில், அந்த இளம்பெண்ணுக்கும், சேகருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.. 2 பேரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளதாகவும் தெரிகிறது..

வனஜா - கோபம்
இந்த விஷயம் சேகரின் மனைவி வனஜாவுக்கு தெரியவரவே, கணவரை தட்டிக் கேட்டுள்ளார்.. கள்ளக்காதலை கைவிடும்படியும் சொல்லி உள்ளார்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சேகர், மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனையடுத்து, வனஜா, நேரடியாகவே போலீசுக்கு சென்றுவிட்டார்.. படிக்க வந்த பெண்ணிடம் தவறான உறவு வைத்துள்ள, தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. அந்த புகாரை ஏற்ற போலீசாரும், உரிய விசாரணை நடத்தி சேகரை கைது செய்தனர்... அந்த இளம்பெண்ணுக்கும் அறிவுரை சொல்லி வார்னிங் தந்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications