சென்னையில் இந்த 15 இடங்கள் தான்.. 2026ல் நகரின் தலையெழுத்தையே தீர்மானிக்க போகுது.. நீங்களே பாருங்க
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மாதவரம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், போரூர், மொத்தம் 15 இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறி ஏறி பயணம் செய்யும் வசதியும் உருவாக்கப்படுகிறது.
சென்னை விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இருவழித்தடங்களில் (கோயம்பேடு, திருமங்கலம் வழியாக ஒரு தடம், சைதாப்பேட்டை, நந்தனம் வழியாக மறுதடம்) ரயில்கள் 55 கிமீ தூரத்திற்கு இயக்கப்படுகிறது.

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை தினசரி 3 முதல் 4 லட்சம் ஆக உள்ளது. அதேநேரம் பேருந்துகளில் பயணிப்போரின் எண்ணிக்கை 35 லட்சமாக உள்ளது.வரும் காலத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை விரைவில் பெரிய அளவில் உயர வேண்டும் என்றால், சென்னை அனைத்து பகுதிகளையும் டவுன் பஸ்கள் போல் மெட்ரோ ரயில் வழித்தடத்தை இணைத்தாக வேண்டியுள்ளது.
அதன்படியே சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் 116.1 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் - சிறுசேரி இடையே 45.4 கி.மீ தொலைவுக்கு 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே 26.1 கி.மீ தொலைவுக்கு 4-வது வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 44.6 கி.மீ தொலைவுக்கு 5-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதை மற்றும் ரயில்நிலையங்கள் அமைக்கும் பணிகள் சென்னை நகரம் . இந்த நிலையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 15 ரயில்நிலையங்களில் வழித்தடம் மாறும் வசதி அமைக்கப்பட உள்ளது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை 2026-ம் ஆண்டு முதல் படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்.
தற்போது உள்ள பஸ் நிலையங்கள், ரயில்நிலையங்கள், முதல் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுடன் போக்குவரத்தை இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் 15 மெட்ரோ ரயில் நிலையங்களில் வழித்தடம் மாறி ஏறி பயணம் செய்யும் வசதியும் உருவாக்கப்படுகிறது.
மாதவரம், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், சோழிங்கநல்லூர், போரூர், ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், கோயம்பேடு புறநகர் பஸ்நிலையம், திருமங்கலம், வடபழனி, நந்தனம், பரங்கிமலை, ஆலந்தூர் ஆகிய 15 மெட்ரோ ரயில்நிலையங்களில் ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்துக்கு மாறி ஏறி செல்லும் வசதிகள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் 2026 முதல் 2028ம் ஆண்டுக்குள் படிப்படியாக 2க்கட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்கும் போது சென்னையில் மக்கள் மெட்ரோ ரயிலையேஅதிகம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
-
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications