"டார்கெட் அங்கிள்ஸ்!" அடிக்கடி வீடியோ கால் வருகிறதா? நீங்கதான் டார்கெட்.. தப்பிக்க வழி என்ன?
ஆன்லைன் மோசடி வழியாக பணம் பறிக்கும் கும்பல்களிடமிருந்து தப்பிக்க இதை செய்தால் போதும்
சென்னை: சமீப காலங்களாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றவாளிகள் ஓரு குறிப்பிட்ட வயதுடைய ஆண்களை மட்டுமே குறி வைத்து செயல்படுகின்றனர் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இந்த உலகத்தையே நமது உள்ளங்கையில் சுருக்கினாலும், இதிலும் சில பின்னடைவுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், சோஷியல் மீடியாக்களில் நடைபெறும் சைபர் கிரைம்கள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து ஆய்வு நடத்தி சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். சமீப நாட்களாக ஆபாச அழைப்புகள் வருவதும், பின்னர் அந்த அழைப்புகளை ஆதாரமாக கொண்டு மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களும் அதிகம் நடைபெற்று வருகிறது.
இதற்கான காரணம், இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள், இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதை காவல்துறையினர் விளக்கியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாவது, "சமூக வலைத்தளங்களில் அதிகமாக இயங்கி வரும் நபர்களைதான் இந்த 'குழுக்கள்' குறிவைக்கின்றன. மிகச் சரியாக சொல்வதெனில் திருமணமான 40 வயதிற்குட்பட்டவர்களைதான் இவர்கள் குறி வைக்கின்றனர். இந்த நபர்களுக்கு அடையாளதம் தெரியாத நபர்களிடமிருந்து அழைப்பு வரும்.

உஷார் மக்களே
அந்த அடையாளம் தெரியாத அக்கவுன்ட்டின் ப்ரொஃபைல் படத்தில் ஒரு பெண்ணின்ஃபோட்டோ இருக்கும். நீங்களும் அது அந்த பெண்ணுடையதுதான் என்று நம்பிதிருப்பி மெசேஜ் அனுப்புவீர்கள். ஆனால் அந்தபக்கமிருந்து வரும் மெசேஜ்கள்அனைத்தும் செக்ஸை மையப்படுத்தியதாகே இருக்கும். எந்த ஒரு பெண்ணும்எடுத்தவுடன் செக்ஸ் குறித்து பேசிவிட மாட்டார். இதிலிருந்து நீங்கள்உஷாராகிக்கொள்ளலாம். இருப்பினும் சிலர் துணிந்து இந்த ஆபத்தில்இறங்குவார்கள். என்னதான் நடக்கிறது என்பதை பார்த்துவிடலாம் என்று நினைத்துஅந்த அடையாளம் தெரியாத நபருடன் பேச தொடங்குவார்கள். இதுதான் நாம் செய்யும்முதல் பெரிய பிழை.

வீடியோ கால்
அதன் பின்னர் இரண்டாவது கட்டமாக வீடியோ கால் அழைப்பு வரும். நீங்கள் இதனை எதிர்பார்த்தே இருக்க மாட்டீர்கள். சரி அட்டென்ட் செய்து பார்ப்போம் என்கிற ஒருவித குருட்டு தைரியத்தில் அட்டென்ட் செய்து பார்ப்பீர்கள். ஆனால், அந்தபக்கம் இருக்கும் பெண்மணி நிர்வாணமாக இருப்பார். இதனை நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். உடனே உங்களையும் அப்பெண் நிர்வாணமாக சொல்வார். நீங்கள் யோசிப்பதற்குள் அப்பெண்மணி அடுத்த கட்டத்திற்குசென்றுவிடுவார். இதிலும் தப்பிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதாவது நீங்கள் சொல்வதற்கு அந்த பக்கம் இருக்கும் பெண்ணிடமிருந்து பதில் வராது.

வீடியோ ரெக்கார்ட்
நீங்கள் எதையோ பேசிக்கொண்டிருப்பீர்கள். அவர் நீங்கள் பேசியதற்கு சம்பந்தமே இல்லாமல் வேறு எதையோ பேசிக்கொண்டிருப்பார். இதனை உணர்ந்த உடனே வீடியோ காலை கட்செய்தால் தப்பித்துக்கொள்ளலாம். ஆனால், இப்படி கட் செய்யாமல் தொடர்ந்தால் சிக்கிக்கொள்வீர்கள். ஏனெனில் நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது உண்மையான பெண் கிடையாது. அது ஒரு வீடியோ. அந்த பக்கம் இருப்பவர் தனது
கேமிரா முன்னர் அந்த வீடியோவை வைத்துவிட்டு நீங்கள் செய்வதை அவர்கள் ரெக்கார்ட் செய்துக்கொண்டிருப்பார்கள். இதன் பின்னர் உங்களை யார் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது.

மிரட்டி பணம் பறித்தல்
பின்னர் மிரட்டல் தொடங்கும். இந்த வீடியோவை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த அதிர்ச்சியிலிருந்து நீங்கள் மீள்வதற்குள், "வேறு யாருக்கும் வீடியோவை அனுப்பி வைக்க வேண்டாம் எனில் பணம் அனுப்ப வேண்டும்"
என்று மிரட்டுவார்கள். உடனே நீங்களும் பணத்தை அனுப்பி வைத்துவிடுவீர்கள். அவ்வளவுதான் பிரச்னை ஓய்ந்தது என்று நினைத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அதுதான் கிடையாது. ஒருமுறை நீங்கள் பணத் கொடுக்க தொடங்கியவுடன் அவர்களின் மிரட்டல்கள் வெவ்வேறு வடிவத்தில் இருக்கும். பொலீஸ், வழக்கறிஞர்,நீதிபதியின் உதவியாளர், மருத்துவர் என வெவ்வேறு வடிவங்களில் உங்களை தொடர்பு
கொண்டு மிரட்டுவார்கள்.

பேஃக் ஐடி
இவர்களை கண்டுபிடிப்பது சுலபமல்ல. நாங்கள் செய்த ஆய்வில் சுமார் 200சிம்கார்டுகள் ஓரேயொரு செல்போனில் போட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல
நூற்றுக்கணக்கான போலி சோஷியல் மீடியா அக்கவுண்ட் குறித்து பேஸ்புக்,
டிவிட்டர் போன்ற நிறுவனங்களிடம் புகார் அளித்து வருகிறோம். இதில் சிலஅக்கவுன்ட்கள் முடக்கப்படுகிறது. ஆனால் சில அப்படியே செயல்பட்டு வருகிறது.எனவே இதிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் உடனடியாக காவல் நிலையத்தை அணுகவேண்டும். அப்போதுதான் நாங்கள் சம்பந்தப்பட்ட ஐடியை முடக்க நடவடிக்கைஎடுப்போம்" என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications