இது தான் மோடியின் பாலிசி! குஜராத்தின் வாட் நகர் டூ இந்தியாவின் தலைநகர்! சுவாரஸ்யமான தகவல்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு உள்ளூர் முதல் உலக அளவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்தச் சூழலில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, அரசியலிலும், அதிகாரத்திலும் சிகரம் தொட்ட மோடி பற்றிய சுவாரஸ்யமான தகவலை இங்கே பார்க்கலாம்.

This is Modis policy! Wat Nagar of Gujarat is the capital of India! Interesting information!

பிரதமர் மோடியை பொறுத்தவரை, அவரது சிறுவயதில் அம்மாவுக்கு உதவிக்கரமாக வீட்டுப்பணிகளையும் கவனித்துக்கொள்வார். பள்ளி முடிந்ததும் வாட் நகர் ரயில் நிலையத்தில் தனது தந்தை நடத்தி வந்த தேநீர் கடைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்த மோடி, அங்கு அவருக்கு தேவையான உதவிகளை செய்வார்.

பருவ வயதில் மோடியின் நண்பர்கள் பலரும் விளையாட்டு, கேலி கிண்டல் எனச் சுற்றித்திரிய இவருக்கோ குடும்ப பொறுப்பை தாங்கி நிற்க வேண்டிய நிலை. மோடியை பொறுத்தவரை பள்ளிப்பருவத்தில் இருந்தே எந்த ஒரு காரியத்தையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என விரும்பக் கூடியவர்.

சிறுவயது முதலே சவால்களை ஏற்று அதை வெல்ல வேண்டும் என நினைப்பவர். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டு போவது தனக்கு பிடிக்காது என்பது தான் மோடியின் பாலிசியாகும். இப்போது இல்லை அரசியலுக்கு வருவதற்கு முன்னரே தனது நடை, உடை, பேச்சு, உள்ளிட்ட விவகாரங்களில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர் மோடி.

காலத்தின் மாற்றத்திற்கேற்ப தன்னை அப்டேட் செய்துக்கொள்வதில் ஆர்வம் மிகுந்தவர் பிரதமர் மோடி. இதனிடையே ஒருவரை பார்த்து பேசிய சில நிமிடங்களில் அவரது குணாதிசயங்கள், திறமைகளை துல்லியமாக கணிக்கக்கூடிய ஆற்றல் பிரதமர் மோடிக்கு உள்ளதாக பத்திரிகையாளர் வினோத் கே.ஜோஸ் என்பவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+