கல்வி டூ அரசியல்! மாணவர்கள் சந்திப்பில் 'ஐன்ஸ்டீனை' மேற்கோள் காட்டிய நடிகர் விஜய்.. காரணம் இதுதான்
சென்னை: 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற 1.500 மாணவர்களை சந்தித்து ஊக்கத்தொகை வழக்கும் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதில் ஐன்ஸ்டீன் குறித்து அவர் பேசியுள்ள கருத்து அனைவரையும் ஈர்த்துள்ளது. ஏன் ஐன்ஸ்டீனை அவர் இங்கு குறிப்பிட்டார்? என்பது குறித்து சிலர் கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
"ஒரு முழுமையான கல்வி என்பது நம்முடைய பள்ளி, கல்லூரி பாடங்களை கடந்து, எது நமது மூளையில் எஞ்சி இருக்கிறதோ அதுதான் முழுமையான கல்வி" என்கிற ஐன்ஸ்டீனின் பிரபலமான பழமொழியை விஜய் மேற்கோள் காட்டியிருந்தார்.

சரி, அறிவியல் உலகில் எவ்வளவோ பெரிய ஜாம்பவான்கள் இருந்தாலும், ஏன் ஐன்ஸ்டீனை மட்டும் விஜய் குறிப்பிட்டார்? இதை புரிந்துக்கொள்ள வேண்டும் எனில் ஐன்ஸ்டீனின் கல்வி கற்ற காலத்தை, அவரது வாழக்கையையும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அறிவியலாளர்கள் அனைவரும் பள்ளி பருவத்திலேயே சிறந்து விளங்கியிருக்கிறார்கள். அவர்களின் கல்வி அறிவு அப்போதே மற்ற மாணவர்களிடமிருந்து அவர்களை தனித்து காட்டியிருக்கிறது. அதேபோல கண்டுபிடிப்புகள் என்று வருகிறபோதுதான் அவர்கள் வெளி உலகத்திற்கு தெரிய வந்தார்கள். வேறு எந்த வகையிலும் அவர்கள் வெளியுலகத்தால் அடையாளம் காணப்படவில்லை.
ஆனால் மேற்குறிப்பிட்ட எதிலும் ஐன்ஸ்டீன் பொருந்தவில்லை. ஐன்ஸ்டீனின் பள்ளி பருவத்தை பொறுத்த வரையில் இவர் ஒரு சாதாரண மாணவர்தான். அப்படித்தான் இவரை ஆசிரியர்கள் பார்த்திருக்கிறார்கள். அதேபோல, இவரது கண்டுபிடிப்புகள் வெளி வந்தபோது எந்த அளவுக்கு பிரபலமானாரோ அதே அளவுக்கு, சமூக அரசியல் மாற்றம் குறித்த விஷயங்களில் குரல் எழுப்பியதற்காகவும் இவர் பிரபலமடைந்துள்ளார்.
இவர் தனது 6.5 வயதில்தான் பள்ளி படிப்பை தொடங்கினார். கல்வியை பொறுத்த அளவில் மற்ற மாணவர்களை விட ஐன்ஸ்டீன் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தார். ஆனால், அவரிடம் குறிப்பிட்டு சொல்லும் வகையில் எந்த தனித்திறனும் இல்லாமல் இருந்ததாக ஆசிரியர்கள் கூறியுள்ளனர். எனவே இவர் ஒரு திறமையான மாணவர் என்று எந்த ஆசிரியர்களும் கருதவில்லை. ஆனால் கல்லூரி, அதன் பின்னர் நடத்திய ஆய்வுகள் போன்றவற்றில் ஐன்ஸ்டீன் தனித்துவமாக தெரிந்தார்.
அதேபோல, இவரது கண்டுபிடிப்புகள் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றிருந்தாலும், சமூக மாற்றத்திற்கான விஷயங்களில் தீவிரமாக செயல்பட்டதாலும் இவர் அனைவராலும் அறியப்படுகிறார். ஐன்ஸ்டீனை பொறுத்தவரை போர் கூடவே கூடாது என்பதுதான் நிலைப்பாடு. உலக நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார். பிறப்பால் அவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் கூட தன்னை உலகத்தின் குடிமகன் என்றுதான் அறிவித்துக்கொண்டார்.
அதேபோல யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே ஒற்றுமையை உருவாக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்திருக்கிறார். சிவில் உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் வீதியில் இறங்கி போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். விளைவு இவர் மீது FBI தனது சந்தேகத்தை எழுப்பியது. இவர் சோவியத் ரஷ்யாவின் உளவாளி என்று குற்றம் சாட்டியது. இவரின் பெரும்பாலான நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
வெளிப்படையாக சொல்வதெனில் அமெரிக்கா இவரை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூறியது. அமெரிக்காவை பொறுத்தவரை கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் தவறானவர்கள் என்று அர்த்தம். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை ஐன்ஸ்டீன் உறுதியாக மறுத்தார். "நான் கம்யூனிஸ்ட் கிடையாது. ஆனால் அப்படி இருந்தாலும் கவலைப்படமாட்டேன்" என்று கூறினார். இந்த கருத்து அவருடைய வாழ்க்கையில் ஏராளமான நெருக்கடிகளை ஏற்படுத்தியது.
இவருடைய காலத்தில் பிரபலமாக இருந்த பிற விஞ்ஞானிகள் யாரும் இந்த அளவுக்கு சமூக விஷயங்கள் குரல் கொடுத்தது கிடையாது. பிறப்பதும் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதும், மறைவதும் மட்டுமே அறிவியல் அந்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை முறையாக இருந்த காலத்தில் ஐன்ஸ்டீன் செய்தது மிகப்பெரிய மீறல்.
நடிகர் விஜய் தனது சமீபத்திய திரைப்படங்களில் அரசியல் கருத்துக்களை கூறிவரும் நிலையில், பள்ளி படிப்பில் கெட்டிக்காரராக இருக்கும் மாணவர்கள், தங்கள் வாழ்க்கையிலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் ஐன்ஸ்டீனின் கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ளார் என்று அரசியல் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா?












Click it and Unblock the Notifications