இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று அறிமுகம் செய்யப்பட்ட இல்லத்தரசி கூப்பன் திட்டம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டிஆர் பி ராஜா முக்கியமான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த திட்டத்தின் நுணுக்கமான விஷயம் ஒன்றை அவர் விளக்கி உள்ளார்.

இல்லத்தரசி கூப்பன் என்ற பெயரில் 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கூப்பனைப் பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களுக்கு புதிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளலாம்.

dmk tamil nadu assembly elections 2026

இல்லத்தரசி கூப்பன்

இந்த திட்டம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டிஆர் பி ராஜா முக்கியமான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் இந்த திட்டம் மூலமா பலர் டீலர்களிடம் பொருட்களை வாங்குவாங்க. அதில் ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்னா இதில் நம்ம மாநில உற்பத்தியாளர்களுக்கு பெரிய பலன் கொடுக்கும். இது ஒரு பெரிய த்ரூ கொடுக்கும். லோக்கல் உற்பத்தியாளர்களுக்கு இப்போ மிகப்பெரிய ஒரு புஷ்ஷும் இருக்கும். மக்கள் டிவி தொடங்கி பிரிட்ஜ் வரை எது வாங்கினாலும் அது லோக்கல் உற்பத்தியாளர்களுக்கு பலன் கொடுக்கும். அதோடு எம்எஸ்என்ஐஸ்க்கு மிகப்பெரிய ஒரு புஷ்ஷும் இருக்கும். இல்லத்தரசிகளுக்கு வாங்கும் அந்த பொருட்களோட மூலப்பொருட்கள் எல்லாம் தமிழ்நாட்டிலே தயாராகும் பொருட்களாகவும் இருக்கும்.

இதுவே நம்ம சிஸ்டம்ல மீண்டும் அந்த அந்த பணம் வந்து ஜிஎஸ்டிஓ ரெவின்யூவாகவும் வரும். நம்ம தொழிலாளர்களுக்கு சிறுகுறு தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய ஒரு வளர்ச்சி இருக்கும். இதுதான் இந்த இல்லத்தரசி கூப்பன் திட்டத்தின் ரொம்ப ஒரு நுணுடுக்கமான ஒரு விஷயம். முதலமைச்சர் அவர்கள் இல்லத்தரசி கூப்பன் மூலம் காசு கொடுக்கும்போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தனித்துவமான ஒரு தேவை இருக்கும், எல்லோருக்கும் வேறு வேறு தேவை இருக்கும். சிலருக்கு டிவி.. சிலருக்கு பிரிட்ஜ்.. சிலருக்கு மிக்சி தேவைப்படும். உங்களுக்கு இது கொடுக்கிறோம்.. வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்வது இனி சரியாகாது தமிழ்நாட்டுக்கு. அதனால தான் பொறுமையாக யோசித்து ஒவ்வொரு முறையும் தனித்துவமாக யோசித்து சிந்தித்து புதிய திட்டங்களை கொண்டு வருகிறார்கள், என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் : 8ம் வகுப்பு வரை விரிவு செய்யப்படுகிறது

உயர்கல்வி படிக்கும் 35 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்

தமிழ்நாட்டில் 10 புதிய டைடல் பார்க் அமைக்கப்படும்

திருச்சி, மதுரை, சேலம் அருகில் புதிய நகரங்கள் உருவாக்கப்படும்

மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்

விவசாயிகளுக்கு நவீன பம்பு செட் அமைத்து தரப்படும்

புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட தொகை 1500 ரூபாயாக உயர்வு செய்யப்படும்

சென்னையில் செம்மொழி மாநாடு நடத்தப்படும்

மத்திய - மாநில உறவு தொடர்பான நீதிபதி குரியன் ஜோசப் அறிக்கை நாடு முழுக்க எடுத்து செல்லப்படும்

சுய உதவிக்குழுவிற்கு பிணியின்றி ரூ.5 லட்சம் கடன்

அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு உடனே வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+