இது பெண்களுக்கான அரசு.. இந்திய ஒன்றியமே பாராட்டுகிறது – வெல்லும் பெண்கள் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: மகளிர் உரிமைத் தொகையின் இரண்டாம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற பெயரில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த பெண்கள், அதிகாரிகள், அமைச்சர், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் உதயநிதி ஸ்டாலின், பெண் உரிமையில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் முன் மாதிரியான மாநிலமாக உள்ளது. இது பெண்களுக்கான ஆட்சி என்று பேசியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கிறது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையான முயற்சிகளை செய்து வருகிறது. அரசு ரீதியாக பல திட்டங்களை அறிவிப்பதோடு, அரசியல் ரீதியாக பல்வேறு வியூகங்களை திமுக அமைத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் உரிமைத் திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

வெல்லும் தமிழ்ப் பெண்கள்
அந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "தமிழ்நாட்டின் மகளிருக்கான முன்னேற்றத்திற்கான மற்றுமொரு நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. திராவிட மாடல் அரசு என்றால் பெண்களுக்கான அரசு என்று இன்றைக்கு இந்திய ஒன்றியமே பாராட்டுகிறது. முதலமைச்சர் ஒவ்வொரு திட்டத்தையும் மகளிரை மனதில் வைத்துதான் நிறைவேற்றுகிறார். இன்றைக்கு பெண்கள் பலதுறைகளில் சாதிப்பதை பார்க்கும்போது இதுதான் எங்கள் தமிழ்நாடு என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.
பெண் உரிமையில் இந்தியாவிற்கே தமிழ்நாடு தான் முன் மாதிரியான மாநிலமாக உள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எல்லாம் பெண்களுக்கான உரிமையை பற்றி பேசும்போது, தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. ஆணுக்கு என்ன உரிமையெல்லாம் இருக்கிறதோ அந்த உரிமைகள் எல்லாம் பெண்ணுக்கும் செல்ல வேண்டும் என்று பெரியார் சொல்லியுள்ளார். பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்றால் சொத்தில் சம பங்கும், கல்வியும் செல்ல வேண்டும் என பெரியார் கூறியிருக்கிறார்.
உத்யோகம் பெண்களின் லட்சணம்
இந்த இரண்டையும் செய்து காட்டிய பெருமை திமுகவுக்கு உள்ளது. உத்யோகம் புருச லட்சணம் என்று கூறுவார்கள். உத்யோகம் பெண்களுக்கு லட்சணம் என்பதை திராவிட மாடல் அரசு செய்து காட்டியுள்ளது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் 43 சதவீத பெண்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். குடும்ப தலைவிகள் உழைப்பை இந்தியாவில் முதல்முதலாக அங்கீகரித்தது நம் அரசு தான். நம் முதலமைச்சர் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மற்ற மாநிலங்கள் எல்லாம் பின் தொடர்கிறார்கள்.
அந்த மாநிலங்கள் எல்லாம் இதை உரிமை தொகை என்று சொல்லவில்லை. தமிழ்நாடு மட்டும் தான் அதை உதவி தொகையாக, சலுகை தொகையாக பார்க்காமல் பெண்களின் உரிமையாக பார்க்கிறது. அதன் காரணமாக தான் ஏற்கனவே இருந்த விதிகளை தளர்த்தி தற்போது அத்திட்டத்தை கூடுதல் பெண்களை இணைத்து இன்று விரிவுபடுத்தியுள்ளனர். இதுதவிர புதுமை பெண் திட்டம், தாயுமானவர் திட்டம், தோழி விடுதி திட்டம், மகளிர் சுய உதவிக்குழு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.
சாதனைகள்
விளையாட்டிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் ஏராளமான சாதனைகளை படைத்து வருகின்றனர். திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பெண்கள் மேலும் பல உயரங்களை தொட என் அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். அப்போது உதயநிதி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களின் சாதனைகளை குறிப்பிட்டு பாராட்டினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications