• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இந்த காதலர் தினத்தில் அன்புக்காக ஏங்கும் நெஞ்சங்களுக்கு உங்கள் அன்பை பரிசளியுங்கள்!

சென்னை: இந்த காதலர் தினத்தில் அன்புக்காக ஏங்கும் நெஞ்சங்களுக்கு உங்கள் அன்பை பரிசாக அளிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

அன்பு தான் வாழ்வின் அங்கமே. இந்த உலகத்தையே நம் அன்பால் ஆள முடியும். அந்த அளவிற்கு படர்ந்து விரிந்து கிடப்பது இந்த அன்பு மட்டுமே. ஆனால் அந்த அன்பு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ளது என்று வரையறுத்து வைத்துள்ளனர். கண்டிப்பாக இல்லை. அன்பு எல்லோர் இடத்திலும் கொடுக்கப்பட வேண்டியது. காதல் காற்றை சுவாசிக்காத ஜீவராசிகளை நீங்கள் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு அன்பு ஆழமானது. தோண்ட தோண்ட பொங்கி வழியக் கூடியது. அப்படிப்பட்ட இந்த காதலர் கொண்டாட்டம் வெறும் இரு காதலர்களுக்கு இடையே இல்லாமல் அன்புக்காக ஏங்கும் நெஞ்சங்களுக்கு இடையே நடக்கலாம் அல்லவா. நம்முடைய அன்பு எல்லையை விரிவுபடுத்த முயலுவோம். இனி அன்புக்காக ஏங்கும் நெஞ்சங்கள் ஒரு போதும் காத்திருக்க வேண்டாம்.

This Valentine’s Day, Help These children

சீமாவிற்கு வாலண்டைன் டே கொண்டாட்டம் எல்லாம் அன்று நன்றாகவே அமைந்தது. பூக்கள், பரிசுப் பொருட்கள், புரோபோஸல், வைர மோதிரம் என்று தன்னுடைய காதலரின் காதலில் அவள் மூழ்கி தான் போயிருந்தாள்.

சந்தோஷம் முகத்தில் துள்ள தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த அவள் அன்று கண்டது அன்புக்காக ஏங்கும் ஒரு நெஞ்சை. ஆம் அந்த சிறுவன் தன் பசியை போக்க குப்பைத் தொட்டியில் இருக்கும் உணவை தேடி உண்ண ஆரம்பித்தான். அப்பொழுது தான் சீமாவிற்கு புரிந்தது. அன்பு என்ற ஒன்றை எவ்வளவு ஒரு சின்ன கோட்டிற்குள் அடைத்து வைத்திருக்கிறோம் என்று.

அந்த சிறுவனுடைய உணர்வுக்கு முன் அவளுடைய அன்றைய காதல் உணர்வெல்லாம் கரைந்தது. முகம் வாடிப் போயிற்று, கண்கள் கலங்கின. எங்கே போயிற்று நம் மனிதநேயம் என்ற கேள்வி அவள் மனதுக்குள்? ஆயிரக்கணக்கான கேள்விகள் அவள் மனதில், ஒருவர் மீது காதல் வைத்து கொண்டாடுவது தான் அன்பின் முடிவா?

இல்லை, அன்பு முடிவற்றது. பரந்தது. சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரின் மீதும் அன்பும் அக்கறையும் செலுத்துவதும் நமது கடமை. அதைத்தான் அன்று அன்னை தெரசா செய்தார். அந்த சிறுவனின் தேவையை நாம் பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஏன் இந்த சிறுவர்கள் நம் அன்பை பெற தகுதியற்றவர்களா? கிடையாது நம் அன்பும் அக்கறையையும் அவர்களுக்கு நாம் தாராளமாக கொடுக்கலாம்.

அதைத்தான் செய்தால் அவளும். அந்த பையனை அருகில் உள்ள ரெஸ்டாரெண்ட்டுக்கு அழைத்து சென்று ராஜூவுக்கு உணவளித்தாள். ராஜூ ஒரு ஏழ்மை நிலை சிறுவன். அவன் மட்டுமல்ல அவனுடைய 3 தங்கைகளும், 2 தம்பிகளும் பசியால் வாடி வருகின்றனர். சீமா ராஜூவின் குடும்பத்திற்கு உதவி செய்ய முற்பட்டாள். அந்த குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து படிப்புடன் அன்னமிர்தா திட்டம் மூலம் அவர்களுக்கு ஒரு வேளை உணவை பெற்று தந்துள்ளார்.

ராஜூவை போன்று ஏராளமான குழந்தைகள் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டு ஒரு வேளை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த குழந்தைகளை தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் கீழ் பள்ளிகளில் சேர்த்து அன்னமிர்தா மூலம் உணவளித்து வருகிறோம். அந்தக் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க இந்த உணவுத் திட்டம் உதவியாக இருக்கிறது.

உங்களுடைய அன்பும் ஆதரவும் இது போன்று நிறைய குழந்தைகளுக்கு தேவைப்படுகிறது. உங்கள் காதலர் தினத்தை இந்த அன்பு உள்ளங்களுக்கு நடுவே கொண்டாடலாம். உங்களுடைய அளவு கடந்த அன்பு தான் அவர்களின் பசியை போக்கும். உங்கள் அன்பை அன்புக்காக ஏங்கும் இந்த நெஞ்சங்களுக்கு கொடுங்கள். அவர்களின் அன்புப் பசி உங்கள் உதவிக் கரங்களால் தீறட்டும்.

இந்த மாதிரி எத்தனையோ பேர்களை நம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். கடந்தும் சென்று விடுகிறோம். இனியாவது ஒரு முறை உங்கள் அன்புப் பணியை தொடரலாமே. நம்முடைய உதவிக் கரங்கள் நீண்டால் அவர்களின் தேவைகள் ஈடேறும் அல்லவா. அன்னமிர்தா என்ற திட்டம் குழந்தைகளுக்கு படிப்பின் மூலம் உணவளித்து வருகிறது. இதனால் ஏராளமான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எங்களுடைய நோக்கமே பசியே இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது தான். இதற்காக ஏராளமான நிகழ்ச்சிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். ஊட்டச்சத்து பற்றாக்குறை குழந்தைகள் கூட இதன் மூலம் போதுமான ஊட்டச்சத்துக்களை பெற்று வருகிறார்கள். கல்வியும் பயின்று முன்னேறி வருகிறார்கள்.

ராஜூவை போன்று ஏராளமான குழந்தைகளுக்கு உதவி செய்ய நீங்களும் உங்கள் உதவிக் கரங்களை அன்புடன் நீட்டலாம்.

இந்த காதலர் தினம் வெறும் காதலர்களுக்கான கொண்டாட்டமாக இல்லாமல் அன்புக்காக ஏங்கும் நெஞ்சங்களுக்கான கொண்டாட்டமாக அமையலாம். சீமாவைப் போன்று உங்களுக்குள் இருக்கும் அளவு கடந்த அன்பை உணருங்கள். தேவைப்படும் மக்களுக்கு கொடுத்து மகிழுங்கள். உங்கள் சந்தோஷம் அவர்கள் மனதிலும் பூக்கட்டும். அன்பு பரவட்டும்.

 
 
 
English summary
Love is something with which life begins. The common misconception about love is that it exists only between couples. Love is larger than that. Love is for nature, that higher power, trees, animals, children, for parents, etc. A feeling that can be celebrated and lived among each living being or organism.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more