மோடி ஆர்டர்- சுட்டு தள்ளுங்க-பாஜக பார்த்து கொள்ளும்-அண்ணாமலை பகீர் பேச்சு-திருமாவளவன் கடும் கண்டனம்!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தொல்.திருமாவளவன் எம்பி.
சென்னை: ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்.. சுட்டு தள்ளுங்க.. பாரதிய ஜனதா பார்த்து கொள்ளும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார்.
சமூக வலைதளங்களில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ ஒன்று அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில், உங்களுடைய கைகளில் துப்பாக்கி இருக்கிறது.. துப்பாக்கிக்குள் குண்டு இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்க சுட்டு தள்ளிகிட்டு வந்துகிட்டே இருங்க..மிச்சத்தை பாரதிய ஜனதா பார்த்து கொள்ளும்.. இவ்வாறு அண்ணாமலை பேசுவதாக அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ காட்சியில் அண்ணாமலையின் பேச்சின் ஒரு பகுதி மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. முழு பகுதியும் இடம்பெறவும் இல்லை.

இதனை சுட்டிக்காட்டி திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்' என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா? மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா? தமிழ்நாடு முதல்வ மு.க.ஸ்டாலின், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும். இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
பின்ணியும் அண்ணாமலையின் முழு பேச்சும்
'ஆர்டர் கொடுக்க
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 25, 2023
மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்' என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா? (1/2)@annamalai_k pic.twitter.com/djC6zMzes8
அண்மையில் கிருஷ்ணகிரியில் பாபு என்கிற ராணுவ வீரர் குடும்பத் தகராறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திமுக கவுன்சிலர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு, ராணுவத்தினருக்கு எதிராக இருப்பதாக இந்த கொலை சம்பவத்தை முன்வைத்து பாஜக பிரசாரம் செய்து வருகிறது.
மேலும் முன்னாள் ராணுவத்தினரை உள்ளடக்கிய ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை சென்னையில் பாஜக அண்மையில் நடத்தியது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அண்ணாமலையும் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் என்பவர், ராணுவ வீரர்கள் வெடிகுண்டுகள் வைப்பதில் கை தேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைப்போம் என்றெல்லாம் மிரட்டல் விடுத்திருந்தார். இதனை செய்தியாளர்கள் கண்டித்த போதும், ஆமாம் வெடிகுண்டு வைப்போம் என பேசியிருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையானது. இதனால் கர்னல் பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தக் கூட்டத்தில்தான் அண்ணாமலை, சுட்டுத் தள்ளுங்க.. மோடி ஆர்டர் இருக்கிறது.. பாஜக பார்த்துக் கொள்ளும் எனவும் அண்ணாமலை பேசியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை பேசியது: கொல்லப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு உடனடியாக ரூ10 லட்சம் காசோலை அளிக்கிறோம். அதைத் தாண்டி இரு குழந்தைகளையும் காலத்துக்கும் படிக்க வைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கட்சியின் தலைவர்கள் இருக்கிறோம். அது எங்களுடைய பொறுப்பு. எதற்கு இதை செய்கிறோம் எனில் பார்டரில் இருக்கக் கூடிய ஒரு ஒரு ராணுவ வீரருக்கும் இங்கே இருந்து ஒரு உரக்கமாக ஒரு செய்தியை சொல்லுகிறோம். அரசு உங்களோடு இல்லை என்றாலும் நாங்கள் உங்களோடு இருப்போம் என்ற செய்தியை சொல்கிறோம். உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளிட்டு வந்துகிட்டே இருங்க..மிச்சதை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பார்த்துக் கொள்ளும். எதற்கும் பயப்படாமல் பார்டரில் இருக்கக் கூடிய ஒவ்வொரு தமிழ்நாட்டை சேர்ந்த படை வீரனும் கூட இந்தியன் ஆர்மியில் இந்த பேட்சைப் போட்டுகிட்டு சொல்வீங்க.. என நீள்கிறது இந்தப் பேச்சு. அண்ணாமலையின் இந்த பேச்சின் ஒருபகுதியே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications