நான் ஏன் முதல்வராக ஆகக்கூடாது என்று சொல்கிற காலம் வரும்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு
சென்னை: மக்களாக பார்த்து இந்த திருமாவளவன் ஏன் முதல்வராக ஆகக்கூடாது என்று சொல்கிற காலம் வரும் என செங்கல்பட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார். மேலும் பேசிய அவர், "சில பேர் நான் தான் முதல்வர், இங்கே இரண்டு பேருக்குதான் போட்டி.. ஒன்னு டிஎம்கே.. இன்னொன்னு டிவிகே என்கிறார்கள். ஆட்டம் போட்டால் போதும் பதவி கிடைத்துவிடும் என நினைக்கிறார்கள்" என்று விஜய்யை விமர்சித்தும் பேசினார்.
செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது திருமாவளவன் கூறியதாவது:-

ஊடகங்கள் பெருசாக்குகிறார்கள்
ஊடகங்கள் எல்லாம் நான்கு முனை என்று போட்டி என்கிறார்கள். அதுவே தப்பு.. இரண்டு முனைதான். இரண்டு அணிதான். திமுக தலைமையில் ஒரு அணி.. அதிமுக தலைமையில் ஒரு அணி.. மற்ற இரண்டு பேரும் தனியாக நிற்கிறாங்க.. தனி ஆவர்த்தனம் செய்யுறாங்க.. ஒருத்தர் விசில் அடிக்கிறாரு.. இன்னொருத்தர் தனியாக ஆவர்த்தனம் செய்கிறார்.
அவர்கள் களத்திலேயே இல்லை.. மீடியாதான் விஜய் போனார் என்றால் லட்சக்கணக்கில் மக்கள் திரள்கிறார்கள்.. அவர்தான் அடுத்த முதல்வர் என்கிறார்கள். இது மீடியா ஹைப். ஊடகங்கள் திட்டமிட்டு ஊதி பெருசாக்குகின்ற வேலையை செய்கின்றன. திமுக மீது வெறுப்புள்ளவர்கள் திட்டமிட்டு பரப்புகிறார்கள். பாஜகவின் பிடிக்குள் போயிவிட்ட யூடியூப் சேனல்ஸ். பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்ட யூடிபர்ஸ், பாஜகவால் விலைக்கு வாங்கப்பட்ட சேட்டிலைட் சேனல்ஸ். இவுங்க எல்லாம் விஜய்க்கு பயங்கரமாக முக்கியத்துவம் தருகிறார்கள்.
ஆட்டம் போட்டால் போதும்
ஊதி பெருசாக்குகிறாக்ள். தானாக வருகிறது கூட்டம். அதனால் அவர் அடுத்த முதல்வர் என்கிறார்கள். ஓடியாடி உழைக்க தேவையில்லை. மக்களுக்கு தொண்டு செய்ய தேவையில்லை. சினிமாவில் ஆட்டம் போட்டால் போதும். அடுத்த முதல்வர் ஆகிவிட முடியும்..இப்படி ஒரு கனவு தமிழ்நாட்டில் உள்ள ஹீரோ, டைரக்டர் எல்லாருக்கும் உள்ளது. 35 வருஷமாக இந்த மக்கள் களத்தில் நிற்கிற நாம் கூட நான் தான் அடுத்த முதல்வர் என்று சொன்னது இல்லை.
நமக்கு பிராக்டிக்கல் என்னவென்று நன்றாக தெரியும். கள எதார்த்தம் என்னவென்று தெரியும். மக்களாக பார்த்து இந்த திருமாவளவன் ஏன் முதல்வராக ஆகக்கூடாது. என்று சொல்கிற காலம் வர வேண்டும். அப்படி வரும்.. வர வேண்டும். ஆனால் சில பேர் நான் தான் முதல்வர்.. இங்கே இரண்டு பேருக்குதான் போட்டி..ஒன்னு டிஎம்.கே.. இன்னொன்னு டிவிகே என்கிறார்கள்.
திமுக கூட்டணி வெற்றி பெறும்
இங்க இரண்டே பேருக்குதான் போட்டி ஒன்னு அதிமுக கூட்டணி இன்னொன்று திமுக கூட்டணி.. திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி.. கொள்கை வாய்ந்த கூட்டணி.. பொறுப்புணர்வு உள்ள தலைவர்களை கொண்ட கூட்டணி தொலைநோக்கு பார்வையுள்ளவர்களை கொண்ட கூட்டணி அறிவியல் அணுகுமுறை கொண்டவகளை கொண்ட கூட்டணி.
முற்போக்கு எண்ணங்களை கொண்ட கூட்டணி.. அதிமுக கூட்டணி முற்போக்கு எண்ணங்களை கொண்ட கூட்டணியா? கருத்தியல் சார்ந்த கூட்டணி சமூக நீதி கூட்டணியா? வெறுப்பு அரசியலை பேசுகிற கூட்டணி.. சமத்துவத்தை பேசாத கூட்டணி.. சகோதரத்துவத்தை விரும்பாத கூட்டணி.. பாஜக. ஆர்.எஸ்.எஸ்,, அதிமுக இவர்களுக்கு என்ன முற்போக்கு சிந்தனை உள்ளது. எந்த இடத்தில் சமூக நீதிக்காக போராடியுள்ளனர். மிகவும் பிற்போக்குத்தனமான வலது சாரி கும்பல் இந்த மண்ணில் வலிமை பெற்றுவிடகூடாது என்பதால் திமுக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்" இவ்வாறு கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications