இரவில் நண்பருடன் பேசிய கோவை பெண்.. பிரச்சனைக்கு காரணமே ‘இது’ தான்! திருமாவின் திடீர் கோரிக்கை!
சென்னை: கோவை கல்லூரி மாணவி-கூட்டு வல்லுறவு கொடூரம், பெண்களுக்கான பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட அரசு முன்வரவேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் இரவில் காரில் அமர்ந்தபடி தனது நண்பனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் அந்த நபரைத் தாக்கிக் கொடுங்காயத்தைச் செய்துவிட்டு, மாணவியைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்.
அந்தக் கொடிய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரித்தப் போலீசார் அவர்கள் தப்பித்துஓட முயற்சித்த போது, அவர்களைக் காலில் சுட்டுக் கைது செய்துள்ளனர். அந்த மாணவி இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை மாணவி வழக்கு
குற்றவாளிகளை விரைந்து போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் என்றாலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. 2025 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் அளிக்கப்பட்ட உள்துறை அமைச்சகத்தின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி 2024 ஆம் ஆண்டில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 3,407 லிருந்து 5,319 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை, பாலியல் வன்கொடுமை முயற்சிகள் உட்பட, 406 லிருந்து 471 ஆக அதிகரித்துள்ளது.
தொல் திருமாவளவன் அறிக்கை
2023 ஆம் ஆண்டில் 46 ஆக இருந்த பாலியல் துன்புறுத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 96 ஆக உயர்ந்துள்ளது. இது பெண்களின் பாதுகாப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே காட்டுகிறது. எனவே, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மூவரும் குடிபோதையில் இருந்துள்ளனர். இங்கு மட்டுமல்ல பெரும்பாலான குற்ற சம்பவங்கள் குடிபோதையில் இருப்பவர்களாலேயே நிகழ்கின்றன.
குற்றங்கள் மற்றும் மது
அதுமட்டுமின்றித் தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் குடிபோதை காரணமாகவே பெரும்பாலான விபத்துகள் நடக்கின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கானோர் உயிர் இழக்கின்றனர். இந்தியாவில் ஒப்ப்பீட்டளவில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது என்பது உண்மைதானென்றாலும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் அதற்குக் காரணமாக மது பழக்கம் இருப்பதும் கவனத்திற்குரியது. இந்தியாவில் அதிக அளவில் மது அருந்தப்படுவதில் இரண்டாவது மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.
மது தடுப்பு கோரிக்கை
15க்கும் மேற்பட்ட வயதுடையோர் மக்கள் தொகையில் 12% குடிநோயாளிகள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறைந்து இருப்பதாக அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீகார் மாநிலத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.
பூரண மதுவிலக்கு
2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என திமுக, அதிமுக உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்தன. அப்போது இருந்ததை விட இன்று குடி நோயாளிகளால் ஏற்படும் பாதிப்பு தீவிரமடைந்திருக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்." என கூறியுள்ளார்.
-
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications