தூத்துக்குடி துப்பாக்கிசூடு.. அருணா ஜெகதீசன் ஆணைய பணி மேலும் 6 மாதம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு
அருணாஜெகதீசன் ஆணையத்துக்கு 6 மாசம் மேலும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
சென்னை: நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்துக்கு மேலும் 6 மாத கால அவகாசம் கொடுத்தது தமிழக அரசு உத்தரவிட்டது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்... அதன் 100வது நாள் போராட்டத்தில் கலவரம் நடந்ததால் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள்.

துப்பாக்கி சூடு
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது.. அதன்படி தூத்துக்குடி வந்து விசாரணையை நடத்தி வருகிறார் அருணா ஜெகதீசன்.. துப்பாக்கிச்சூடு நடந்த இடங்களில் ஆய்வு, பலியானவர்கள் குடும்பத்தினரிடம் நேரடியாக சென்று விசாரணை என அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட்டார்.

விசாரணை
பிறகு, பொதுமக்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பினரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, அதன் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யபட்டது... கடந்த மே மாதம்கூட, அருணா ஜெகதீசன், முதல்வர் ஸ்டாலினிடம் விசாரணையின் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்திருந்தார்..

பிப்ரவரி
தற்போது நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 2022ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி வரை ஆறுமாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

ரஜினி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்கும் இந்த ஆணையம் தான் ரஜினியையும் விசாரணைக்கு அழைத்தது... ஆனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்கப்பட்டது.. அதேசமயம் எழுத்து பூர்வமாக ரஜினி ஒரு விளக்கமும் அறிக்கையாக தந்திருந்தார்.. ஆனால் அதில் சில சந்தேகம் உள்ளதாக ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், 6 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினியிடம் மீண்டும் விளக்கம் கேட்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
தாய் சிறுத்தைக்கு ஷாக்..திமுகவுக்கு தாவும் குட்டி சிறுத்தைகள்! ‘யோசிக்கும்’ தலையும் ’ஊர்’ புள்ளியும் -
"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்".. திமுகவுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி! -
காங்கிரஸ் உண்டு கொழிக்கும் ஒட்டுண்ணி! பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்! வெளுத்த திமுக -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. திமுகவை டோட்டலாக ரீவேம்ப் செய்கிறாரா? கூட்டணி கட்சிகளுக்கு பெரிய ஆப்புதானா -
“மாணிக்கம் தாகூர் சொல்வது அப்பட்டமான பொய்.. காங்கிரஸ்காரர்கள் நன்றி கெட்டவர்கள்”.. விளாசிய திமுக! -
காங்கிரஸ் இல்லாத தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் - அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த சபதம்! -
அவங்கவங்க வேலையை பார்ப்போம்..திமுக - காங்கிரஸ் சண்டை நல்லதுக்கில்லை! திருநாவுக்கரசர் சீரியஸ் அட்வைஸ் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
"கனெக்டிங் கால் போட்டதே பாஜக தான்.." திமுக- அதிமுக கூட்டணி.. போட்டு உடைத்த மாணிக்கம் தாகூர்! -
“இது 5 ஆண்டு காலம் நடைபெறக்கூடிய ஆட்சி அல்ல!” விஜய்க்கு ஸ்ட்ராங் மெசேஜ்! மு.க.ஸ்டாலின் ஆருடம்!












Click it and Unblock the Notifications