திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்.. ஈரோடு ஸ்டாலினின் எஃகு கோட்டை என முழக்கம்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டார். அவருடன் ஆயிரத்திற்கு மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.
Recommended Video
ஈரோடு மாவட்டம் பெருந்துறை எம்எல்ஏவாக இருந்தவர் தோப்பு கே வெங்கடாசலம். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பெருந்துறையில் போட்டியிட்டு வென்றார். 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதால் இவருக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா கொடுத்தார்.

பெருந்துறை பகுதி
பின்னர் 2016ஆம் ஆண்டும் அதே பெருந்துறை பகுதியில் போட்டியிட்டு தோப்பு வெங்கடாசலம் வென்றார். ஆனால் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக அதே மாவட்டத்தில் உள்ள கே சி கருப்பண்ணனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

ஜெ மறைவு
ஜெயலலிதா மறைந்த பிறகும் தோப்பு ஓரங்கப்பட்டிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைத்த போது தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரவையில் தோப்புக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஏமாற்றமே விஞ்சியது.

கருப்பண்ணனுடன் மோதல்
இதையடுத்து தொடர்ந்து கருப்பண்ணனுடன் மோதல் போக்கு இருந்தது. இந்த நிலையில் கடந்த சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப நனு தாக்கல் செய்தும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

தோப்பு கே வெங்கடாசலம்
இதன் அதிமுக மீது கடும் கோபமடைந்த தோப்பு வெங்கடாசலம் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்றைய தினம் தோப்பு கே வெங்கடாசலம் திமுகவில் இணைந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி!












Click it and Unblock the Notifications