பதில் இல்லாதவர்கள் தான் கேள்விகளை ஒழிப்பார்கள்.. மத்திய அரசு மீது சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் கேள்வி நீக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மதுரை எம்.பி சு.வெங்கடேசன், 'கேள்வி இல்லதவர்கள் தான் பதிலை ஒழிப்பார்கள்" என கடுமையாக சாடி தனது "எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்றம் ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர் கால கூட்டத்தொடர் என மூன்று கட்டங்களாக நாடாளுமன்றம் கூட்டத்தொடர் ஆண்டுக்கு மூன்று முறை கூட்டப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாட்டின் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் . அது குறித்த விவாதங்கள் நடைபெறும்.

Those who dont have answers will eliminate questions: S Venkatesan MP criticizes the BJP government

அதுபோக பல்வேறு மசோதக்களும் நிறைவேற்றப்படும். இது தவிர சில நேரங்களில் அவசிய தேவை கருதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டமும் நடைபெறும். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி சட்டம் அமல்படுத்துவதற்காக ஜூன் 30-ந்தேதி நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடந்தது. அதன்பிறகு சிறப்புக் கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. நடப்பு ஆண்டில் மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது.

மணிப்பூர் விவகாரத்தை வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கின. இதனால் அவையின் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கடும் அமளிக்கு மத்த்யிலும் சில மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதன் மீதும் வாதமும் வாக்கெடுப்பும் நடைபெற்றது. கடந்த மாதம் 11 ஆம் தேதி கூட்டத்தொடர் முடிந்த நிலையில் வரும் நவம்பர்- டிசம்பர் மாதத்தில் குளிர் கால கூட்டத்தொடர் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தான், நாடாளுமன்றத்தின் 5 நாள் சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. 5 அமர்வுகளாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், கூட்டத்தொடரின் அஜெண்டா குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரம் தொடர்பாக மசோதா கொண்டு வரப்படலாம் என பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையின் சாத்தியக்கூறுகளை ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கேள்வி நேரமின்றி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புது நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கேள்வி நேரம் இல்லாமல் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:- பதில் இல்லாதவர்கள் கேள்விகளை ஒழிப்பார்கள். நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடருக்கான அழைப்பு வந்துள்ளது. உறுப்பினர்களின் கேள்வி நேரம் நீக்கப்பட்டுள்ளது. அதானி, மணிப்பூர், சிஏஜி அறிக்கை என எதிர்கட்சிகளின் எந்தக் கேள்விக்கும் பதிலில்லாத ஒரு அரசு வேறென்ன செய்யும்?" என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+