ஆயிரம் ரூபாய்? தமிழகத்துக்கு காசு எங்கே? தெற்கு ரயில்வே நிதி எங்கே? புட்டு புட்டு வைத்த பிங்க் புக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கியுள்ள, 9,286 கோடி ரூபாய் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த பட்டியல், வெளியாகியிருக்கிறது.. புதிய இரட்டை பாதை திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை தமிழகத்துக்கு தந்து வருவதாக ரயில்வே ஊழியர் சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன.

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு, 9,048 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய மத்திய பட்ஜெட்டில், கூடுதலாகவே தெற்கு ரயில்வேக்கு, 9,286 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

Southern railway Central Government Tamil Nadu

எவ்வளவு நிதி: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த பட்டியலை, "பிங்க் புக்" வாயிலாக, ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, புதிய பாதை திட்டங்களுக்கு, 301 கோடி, அகலப்பாதை திட்டங்களுக்கு, 478 கோடி, இரட்டை பாதை திட்டங்களுக்கு, 1,928 கோடி, ரயில் தண்டவாளங்கள் புதுப்பிப்புக்கு, 1,755 கோடி, மின்மயமாக்கல் பணிக்கு, 156 கோடி, சுரங்கம் மற்றும் மேம்பால பணிக்கு, 534 கோடி, சிக்கனல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு, 511 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதற்கு முந்தைய இடைக்கால மத்திய பட்ஜெட்டில், புதிய பாதை திட்டங்களுக்கு, 976 கோடி ரூபாயும், இரட்டை பாதை திட்டங்களுக்கு, 2,214 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. தற்போது, இந்த நிதி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், புதிய மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

திண்டிவனம்: அதாவது, ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி; திண்டிவனம் - திருவண்ணாமலை; அத்திப்பட்டு - புத்துார்; ஈரோடு - பழனி; சென்னை - கடலுார் - புதுச்சேரி போன்ற புதிய ரயில்பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட புதிய ரயில் பாதை திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்திப்பட்டு- புத்துருக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்- நகரிக்கு ரூ. 350 கோடி கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 153 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பழனிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது வெறும் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது

கூடுவாஞ்சேரி:
ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை -ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது வெறும் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை -ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிதி குறைவு: தமிழகத்துக்கு நிதி குறைத்துள்ளது கடும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியையும், மத்திய பட்ஜெட்டில் குறைத்து ஒதுக்கி இருப்பதால், புதிய பாதை திட்டங்கள் முடங்கும் என்று ரயில்வே தொழிற்சங்கங்களும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.

இதைத்தான், மதுரை எம்பி வெங்கடேசனும் நேற்றைய தினம் கடுமையான கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தார்.. "இடைக்கால பட்ஜெட்டில் வந்த பிங்க் புத்தகத்தில் ரூ. 350 கோடி, ரூ. 150 கோடி என்று ஒதுக்கியது வெறும் தேர்தலுக்காக தான். உண்மையான பிங்க் புத்தகம் வந்த பிறகு தான் அது வெட்ட வெளிச்சமாகும் என்று நான் நாடாளுமன்றத்திலேயே கூறினேன். பிங்க் புத்தகத்தை வெளியிடாமலே மோடி அரசு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்தது.

பொது பட்ஜெட்: பொது பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் அப்பட்டமான துரோகத்தை செய்த மோடி அரசு இரயில்வே திட்டங்களிலும் அதே துரோகத்தை அரங்கேற்றியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதியும் பறிக்கப்பட்டது. பொது பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இப்பொழுது ரயில்வேயின் புதிய வழித்தடங்கள் அனைத்துக்கும் இழைக்கப்பட்டுள்ளது" என்று கொந்தளித்திருந்தார்.

ஆனால், இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் சொல்லும்போது, தெற்கு ரயில்வேக்கு கூடுதல் நிதியை இந்த முறை அரசு ஒதுக்கியிருப்பதாக சொல்கிறார்கள்..


அகலப்பாதை:
"தமிழகம், கேரளா, மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் ஒரு பகுதியை கொண்டுள்ள தெற்கு ரயில்வேக்கு, இடைக்கால பட்ஜெட்டில், 9,048 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், 9,286 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நிதி ஒதுக்கியதால் பணிகள் தாமதமின்றி நடக்கும். புதிய மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தாலும், அகலப்பாதை மற்றும் மின்மயமாக்கல் திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்கிறார்கள்

ஜோதிமணி: கரூர் எம்பி ஜோதிமணியும் இதற்குதான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.. "இடைக்கால பட்ஜெட்டில் தமிழக ரயில் வழி தடங்களுக்கு 976 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்து. இப்போது 301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடத்தில் மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது. இரட்டை வழித் தடம் நிதி குறைக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு பிங்க் புத்தகத்தில் வெறும் ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கி உள்ளனர். இந்த தொகை டீ, காபி வாங்கி சாப்பிடக் கூடபோதாது.

அறிவிக்கப்பட்ட நிதியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு மட்டுமே ஒதுக்கி, ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமானப்படுத்தி உள்ளனர். பார்லி., கூட்டத்தொடர் நடைபெறும்போது, பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டிருந்தால், பெரிய பிரளயமே வெடித்திருக்கும்.

கண்டனம்: தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 எம்.பி.,க்களும் பிரச்னையை கிளப்புவோம் என்று பயந்து, தகவலை முன்கூட்டியே வெளியிடாமல் தற்போது வெளியிட்டுள்ளனர். உண்மையான நிதியை ஓதுக்கீடு செய்ய வேண்டும்" என்று கேட்டிருக்கிறார்.

இதயமே இல்லாமல் தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயைப் பிச்சை போடுவது போலப் போட்டிருக்கிறார்கள் என்று திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு காட்டமாக நேற்று காட்டமாக கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+