Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேங்கை வயல் சம்பவம்: சிரித்துக் கொண்டே மலத்தை குடிநீரில் கலந்த நபர்கள்! வெளியான பகீர் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்ட சமூகம் தொடர்பாக மூன்று பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கின்றனர். இதை அடுத்து மலம் கலந்த போது எடுத்த வீடியோ உள்ளிட்ட ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளன்று அந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

pudukottai venkaivayal police

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. சாதிய வன்மம் நிறைந்த இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழக காவல்துறை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறிய நிலையில் இந்த வழக்கு வெள்ளனூர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக வெள்ளலூர் காவல்துறையினர் சுமார் 75 பேரை பிடித்து விசாரணை நடத்தினர் மேலும் மத்திய மண்டல ஐஜியாக இருந்த கார்த்திகேயன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றப்பட்டு வேங்கைவயல் இறையூர் முத்துக்காடு ஆகிய பகுதிகளில் சுமார் 150 நபர்களிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை அளிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை ஆணையத்தையும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைத்தது.

ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. டிஎன்ஏ சோதனை, குரல் மாதிரி பரிசோதனை வரை சென்று விட்ட நிலையில் தற்போது வரை அதாவது பதினைந்து மாதங்களாகியும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த அந்த கயவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தமிழக வரலாற்றில் வேங்கை வயலும் அந்த ஊரில் இருக்கும் குடிநீர் தொட்டியும் ஒரு சாதிய வன்கொடுமை வடுவாகவே மாறிப்போனது.

இந்நிலையில், நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், தமிழக அரசு தரப்பில் , சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திட்டமிட்டே பட்டியல் சமூக மக்கள் சிக்க வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பா. ரஞ்சித் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளதோடு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

pudukottai venkaivayal police

இதற்கிடையே வேங்கை வயல் சம்பவத்தில் குடிநீரில் மலத்தை கலந்ததாக கூறப்படும் முத்துக்கிருஷ்ணன், சுதர்சன் ஆகியோரது ஆடியோக்களும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. குறிப்பாக சுதர்சன் தனது அத்தை, தாயுடன் பேசும் ஆடியோவில் தான்தான் கலந்தேன் போலீசார் கேட்டார்கள் ஆனால் சொல்லவில்லை என்பது போல பேசிய ஆடியோ வெளியானது.

இதற்கிடையே குடிநீர் தொட்டியில் ஏறி சிரித்துக்கொண்டே மலத்தை கலப்பது போன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த ஆடியோவில் ஒரு பிளாஸ்டிக் கவரில் மலத்தை கொண்டு சென்ற நபர்கள் அதை குடிநீரில் கலக்கிறார்கள். அப்போது "சுதர்சா ஜூம் பண்ணி எடு" என ஒருவர் சிரித்துக்கொண்டே பேசுவதும் பதிவாகி இருக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், போலீஸ் விசாரணையில் இருக்கும் போது எப்படி வீடியோக்களும் ஆடியோக்களும் வெளியானது என கேள்வி எழுப்புகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+